"திரும்பவும் தனுஷே அவர கொண்டு வரணும்.!" - மித்ரன் ஜவஹர் குறித்து அப்பவே சொன்ன விவேக்.. வீடியோ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

Advertising
>
Advertising

திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடித்துள்ளனர். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.

காதல், நட்பு, உறவு, குடும்பம் என சகலத்தையும் ஃபீல் குட் டிராமா படமாக ரசிகர்களைக் கவர்ந்துள்ள இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.  இவர் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் யாரடி நீ மோகினி, குட்டி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். இந்நிலையில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் குறித்து மறைந்த நடிகர் விவேக், விஜய் டிவி ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினியிடம் அளித்திருக்கும் பேட்டியில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் குறித்துபேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில், “மித்ரன் ஜவஹர் உத்தமபுத்திரன் திரைப்படத்தை இயக்கியவர். பியூட்டிஃபுல் இயக்குனர் அவர். மீண்டும் நிறைய வாய்ப்புகள் அவர் பெற வேண்டும். என்னை கேட்டால் தனுஷே மீண்டும் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்து அவரை கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.. அதுதான் என்னுடைய ஆசை” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதை தமது ட்விட்டரில் பகிர்ந்துள்ள இயக்குனர் மித்ரன் ஜவஹர் நன்றி தெரிவித்திருக்கிறார். இயக்குனர் விவேக் மறைந்தாலும் அவருடைய வார்த்தைகள் தற்போது நனவாகி இருக்கின்றன. தனுஷ், ஜெனிலியா நடித்த உத்தமபுத்திரன் திரைப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் தனுஷ் மற்றும் விவேக் இடம்பெறும் காமெடி காட்சிகள் படத்தில் ரசிக்கும்படியான காட்சிகளாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Vivek about Dhanush Thiruchitrambalam director Mithran Jawahar

People looking for online information on Dhanush, Mithran Jawahar, Thiruchitrambalam will find this news story useful.