வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், என் முதல் படத்துக்கு பிறகு , திரையுலகில் சிம்பு தான் என் முதல் நண்பர். நாங்கள் இருவரும் மனதளவில் ஒருவருக்கொருவர் நல்ல மரியாதையுடன் இருக்கிறோம். அவர் மற்ற திரையுலகினரை விட மிகவும் வெளிப்படையானவர்.
மேலும் அவர் என்னுடன் சினிமா குறித்தும் நடிப்பும் குறித்தும் ராட்சசன் படத்தின் போது பல்வேறு விஷயங்களை என்னுடன் பகிர்ந்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இது என்று பகிர்ந்துள்ளார்.
தன் ஒரு பகுதியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் 'மோகன்தாஸ்' பட டைட்டில் அறிவிப்பு டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை முரளி கார்த்திக் எழுதி இயக்க, விஷ்ணு விஷால் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார்.