விஷ்ணு விஷால் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்.. 2ND PART குறித்து வெளியான சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.

Advertising
>
Advertising

Also Read | அஜித் நடிக்கும் 'AK62'.. ஷூட்டிங் தொடங்கும் முன்பே OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

இவர் வெண்ணிலா கபடிக்குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் விஷ்ணு விஷால் & 'பொன்னியின் செல்வன் பூங்குழலி'  ஐஸ்வர்யா லெஷ்மி நடிப்பில் கட்டா குஸ்தி படம் கடந்த (02.12.2022) அன்று வெளியானது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த படம் பெற்றது.

இந்த படத்தை விஷணு விஷாலின் விஷணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ’RT டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் தயாரித்தது.

இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், கட்டா குஸ்தி படத்தின் பிஸினஸ் 30+ கோடிக்கும் மேல் வியாபாரத்தை தாண்ட உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த வருடத்தில் FIR & கட்டா குஸ்தி இரண்டு படங்களும் வெற்றி படமாக அமைந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கட்டா குஸ்தி படத்திற்கு முன் விஷ்ணு விஷால் நடிப்பில் 'எஃப்ஐஆர்' படம் வெளியானது.‌

இப்படம் கடந்த ஆண்டு 2022 பிப்ரவரி 11 அன்று உலகம் முழுவதும் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்  இப்படத்தை வெளியிட்டது. பைசல் இப்ராஹிம் ரெய்ஸ் என்பதின் சுருக்கமே FIR. விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குனர் மனு ஆனந்த் இயக்கினார்.‌

இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்தனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த FIR படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என விஷ்ணு விஷால் அதிகாரப்பூர்வமாக ட்வீட் செய்துள்ளார். விரைவில் இந்த படம் குறித்து படக்குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | பசுவிற்கு உணவளித்து மாட்டு பொங்கல் கொண்டாடிய சினேகா, பிரசன்னா.. CUTE PHOTOS

தொடர்புடைய இணைப்புகள்

Vishnu Vishal confirmed FIR movie second part

People looking for online information on FIR movie, FIR movie second part, Vishnu Vishal will find this news story useful.