''ஒரு பிளான் இருக்கு, நீங்க ஒகேனு சொன்னா மட்டும் தான் பண்ணுவேன்'' - விஷ்ணு விஷால் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா, உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் 'காடன்' திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. பின்னர் தற்போது ஊரடங்கின் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகியுள்ளது.

Vishnu Vishal asks suggestion to fans about his next Movie | விஷ்ணு விஷால் தனது அடுத்த படம் குறித்து ட்வீட்

இதனையடுத்து  அவர் நடிப்பில் 'எஃப்ஐஆர்', 'இன்று நேற்று நாளை 2' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகிறது. இதில் 'எஃப்ஐஆர்' படத்தின் எடிட்டிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அந்த படத்தின் எடிட்டர் ஜிகே பிரசன்னா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக ரசிகர்களிடம் யோசனை கேட்டிருந்தார்.  அந்த பதிவில், ''என்னுடைய புதிய படத்தை ஏப்ரல் 11 அன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் வாழ்க்கை வேறு திட்டங்களை வைத்திருக்கிறது. அதே தினத்தில் நேர்மறை எண்ணத்துடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆனால் அது உங்களது அனுமதி இருந்தால் மட்டுமே. வித்தியாசமான முயற்சியாக டைட்டில் அறிவிப்பு டீஸரை வெளியிடவிருக்கிறோம். ஆனால் உங்களின் முடிவே இறுதியானது'' என்று ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பெரும்பாலான ரசிகர்கள் வெளியிடுங்கள் என பதிலளித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vishnu Vishal asks suggestion to fans about his next Movie | விஷ்ணு விஷால் தனது அடுத்த படம் குறித்து ட்வீட்

People looking for online information on Lockdown, Vishnu Vishal will find this news story useful.