விஷ்ணு விஷால் லாக்டவுன் அவதாரம்
நடிகர் விஷ்ணு விஷால் லாக்டவுன் காலகட்டத்தில் தனது தந்தைக்கு தலைமுடி வெட்டிவிடும் படங்களை சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியிட்டார். அதற்கு அவர் இவ்வாறு தலைப்பிட்டார், "டெஸ்பரேட் டைம்ஸ், டெஸ்பரேட் மெஷர்ஸ்’ (தன் அப்பாவின் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய தருணம்) ஒவ்வொரு வேலையும் நாமே செய்யும் போதுதான் தெரிகிறது அது மிகவும் எளிது என்று தோன்றுகிறது My # MyLockdownAvatars" என்று பதிவிட்டார் விஷ்ணு விஷால்.
ட்விட்டரில் ஷாந்தனு மற்றும் விஷ்ணு விஷாலின் ஜாலி அரட்டை
விஷ்ணு விஷாலும் ஷாந்தனுவும் நல்ல நண்பர்கள். இந்த ஹேர்கட் ட்வீட்டுக்கு ஷாந்தனு பதிலளித்தார். அதில் அவர் கூறியது “மச்சான் எனக்கும் உன் அவசர உதவி தேவை ப்ளீஸ்” அதற்கு விஷ்ணு பதிலளித்தார் “ஹாஹா .... மச்சி நீ எப்ப ரெடின்னு சொல்லு ...ஆனா உன் வொய்ஃப் கிகி விஜய் பெர்மிஷன் வாங்கிடு....” என்று கலாய்த்து பதில் அளித்திருந்தார்.
சாந்தனுவின் கட்டிங் பதில்
நண்பனின் கலாய்த்தலுக்கு ஷாந்தனு சற்றும் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு பதிலைக் கொடுத்தார், அதில்அவர் “இதுக்கு எதுக்கு பெர்மிஷன் எல்லாம்... நான் கட் தானே கேட்டேன்.. கட்டிங்கா கேட்டேன்? ” என்றார். இந்த கலாய் அரட்டையைப் பார்த்து ட்விட்டர்வாசிகள் சந்தோஷமடைந்து கமெண்டுகளையும், ஸ்மைலி ஈமோஜிகளையும் அள்ளித் தெளித்து வருகின்றனர்