தன் படத்திற்கு மகன் பெயர்... POLICE லுக்கில் மிரட்டும் விஷ்ணு விஷால்! புதிய படத்தின் MOTION POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.

Advertising
>
Advertising

Also Read | அடட.. செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்..!

இவர் வெண்ணிலா கபடிக்குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவரான விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக 'எஃப்ஐஆர்' படம் வெளியானது.‌

இப்படம் கடந்த 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்  இப்படத்தை வெளியிட்டது.பைசல் இப்ராஹிம் ரெய்ஸ் என்பதின் சுருக்கமே FIR.விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில்,  “எஃப் ஐ ஆர் (FIR)” படத்தை நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கினார்.‌

இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்தனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் விஷ்ணு விஷால், தனது அடுத்த படமாக பிரவீன் கே இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தனது மகன் ஆர்யன் பெயரையே தலைப்பாக வைத்துள்ளார். இந்த படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என‌ 5 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரைம் கதையாக இந்த படம் உருவாகும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தை சுஃப்ரா, ஆர்யன் ரமேஷ், விஷ்ணு விஷால் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர்,  வாணி போஜன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் விஷ்ணு விஷால் போலீஸ் தோற்றத்தில் தோன்றியுள்ளார்.

 

Also Read | "சூப்பர் ஸ்டார் ரைடர்".. நடிகர் அஜித் குமாரை பாராட்டிய மஞ்சு வாரியர்.. இது தான் காரணமா?

தொடர்புடைய இணைப்புகள்

Vishnu Vishal Aaryan first look motion poster Released

People looking for online information on Aaryan, Aaryan first look motion poster, Vishnu Vishal will find this news story useful.