விஷால் - சுனைனா நடிக்கும் 'லத்தி'.. பட ரிலீஸ் உரிமம் குறித்து வெளிவந்த சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால், சுனைனா நடிக்கும் 'லத்தி' படத்தின் ரிலீஸ் உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "நலிந்த நிலையிலும்".. பாரதிராஜாவை மருத்துவமனையில் சந்தித்த பின் வைரமுத்து உருக்கமான ட்வீட்!

தமிழில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் அதன்பிறகு நடித்த சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவர் தற்போது புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் லத்தி படத்தில் நடித்து வருகிறார்.

தமிழைத் தாண்டி தெலுங்கிலும் விஷால் படங்களுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

பாலசுப்ரமணியம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

லத்தி திரைப்படம் படம் ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி வினியோகஸ்தர் JPR பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24.07.2022 அன்று இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read | பிரித்விராஜ் & நயன்தாரா நடிக்கும் 'கோல்டு'.. OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தொடர்புடைய இணைப்புகள்

Vishal Sunaina Laththi Movie Telugu Rights Bagged by JPR Films

People looking for online information on Laththi movie, Laththi Movie Updates, Sunaina, Vishal will find this news story useful.