விஷால் - சுனைனா நடிக்கும் 'லத்தி'.. டீசர் ரிலீஸ் எப்போ? வெளிவந்த GLIMPSE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் அதன்பிறகு நடித்த சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

Advertising
>
Advertising

Also Read | மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் புதிய படம்.. ஷூட்டிங் போட்டோவுடன் செம தகவல்!

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவர் தற்போது புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் லத்தி படத்தில் நடித்து வருகிறார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் விஷால் படங்களுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. பாலசுப்ரமணியம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

லத்தி திரைப்படம் படம் ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் அப்டேட் வெளியாகி உள்ளது. வரும் 24.07.2022 அன்று இந்த படத்தின் டீஸர் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் வீடியோ துணுக்கை வெளியிட்டுள்ளது.

Also Read | திவ்யபாரதியின் கலக்கல் போட்டோஷூட்.. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செம்மயான ரீல்ஸ் வீடியோ!

விஷால் - சுனைனா நடிக்கும் 'லத்தி'.. டீசர் ரிலீஸ் எப்போ? வெளிவந்த GLIMPSE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vishal Sunaina Laththi Movie Teaser Update

People looking for online information on Laththi movie, Laththi Movie Teaser Update, Sunaina, Vishal will find this news story useful.