தமிழில் செல்லமே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு.. அனுமதியின்றி வெளியான PHOTO-க்களால் கடுப்பான ஆலியா பட்..!
பின்னர் இவர், சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும், லத்தி திரைப்படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றன.
புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கிய லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்தனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்தது.
Images are subject to © copyright to their respective owners.
லத்தி படத்தினை அடுத்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தில் S.J. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.
விஷாலின் 'எனிமி' படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய 'வலிமை' விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்குனராக உமேஷ் ராஜ்குமார் பணியாற்றுகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில், பிரத்யேக லாரி ஒன்று கட்டிடத்தினை இடித்து வரும் போது கட்டுப்பாட்டை இழந்து செட்டின் சுவரில் மோதும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இதில் ஆபத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Also Read | ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் இருக்காரா?.. கலகலப்பாக பதில் சொன்ன DADA கவின்