ஜொலிக்கும் செட்.. குத்து பாட்டுக்கு ஆடிய விஷால் & S.J.சூர்யா… மார்க் ஆண்டனி BTS ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | விஷால் - சுனைனாவின் புதிய படம்.. வெளியான செம்ம ரிலீஸ் தேதி! போடு.. பண்டிகை தான்.!

விஷாலின் பேன் இந்தியா திரைப்படம்…

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் வெளியானது. அந்த படத்துக்கு பிறகு தற்போது ‘லத்தி’ திரைப்படம் உருவாகி வருகிறது. லத்தி திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், விஷாலின் 33வது படமாக உருவாகும்  புதிய படமான 'மார்க் ஆண்டனி' படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.  இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர், நடிகர் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். விஷாலின் 'எனிமி' படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார் .மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார்.

மார்க் ஆண்டனி…

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில்  வர்மா ,நிழல்கள் ரவி  ஆகியோர் நடிக்கிறார்கள். ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்கம் உமேஷ் ராஜ்குமார் மேற்கொள்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்று அது சம்மந்தமானப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது.

இணைந்து ஆடிய விஷால் & S J சூர்யா…

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்துக்காக பூந்தமல்லி சுந்தர் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக ஒரு செட் அமைக்கப்பட்டு அதில் ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த செட்டில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இணைந்து ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் சொலல்ப்படுகிறது. இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பாடல் படமாக்கப்பட்ட ஜொலிக்கும் செட்டின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Also Read | கார்த்தி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் …விருமன் Team வெளியிட்ட Exciting தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Vishal S J suryah pan india mark antony Huge set pic

People looking for online information on விஷால், Mark Antony set, S J Suryah, SJ சூர்யா, Vishal will find this news story useful.