விஷாலின் லத்தி.. 5 மொழிகளில் வெளியான ’தெறிக்கவிடும்’ FIRST LOOK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால் நடிக்கும் லத்தி படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Raja Rani 2: “எல்லாத்துக்கும் காரணம் அவருதான்”… உருகும் சந்தியா claps வாங்கிய சரவணன்!

செல்லமே to லத்தி…

தமிழில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் அதன்பிறகு நடித்த சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவர் தற்போது புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் லத்தி படத்தில் நடித்து வருகிறார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் விஷால் படங்களுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியி உள்ளது.

நண்பர்கள் தயாரிப்பில் லத்தி…

லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. பாலசுப்ரமணியம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இந்த படம் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தாலும் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஐந்து மொழிகளில்…

விஷாலின் லத்தி படம் தற்போது ஐந்து மொழிகளில் உருவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விஷாலின் ஆக்ஷன் படங்களுக்கு இந்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஷால் சத்யம், பாயும் புலி, வெடி மற்றும் அயோக்யா ஆகிய படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

12 ஆவது முறையாக இணைந்த யுவன்…

சமீபத்தில் இந்த படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமானதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை விஷாலின் 11 படங்களுக்கு யுவன் இசையமைத்துள்ள நிலையில் இருவரும் இணையும் 12 ஆவது படமாக லத்தி அமைந்துள்ளது. இந்த அறிவிப்பு விஷால் மற்றும் யுவன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக அமைந்தது.

“எல்லாத்தயும் சிரிச்சுட்டே எதிர்கொள்ள காரணம்....” அடடே.. பிறந்த நாளில் பிரசாந்த் நெகிழ்ச்சி

தொடர்புடைய இணைப்புகள்

Vishal laththi movie first look poster in five languages

People looking for online information on Laththi movie, Laththi movie first look poster, Vishal, Vishal laththi movie will find this news story useful.