அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர்.
இந்நிலையில் இவர் விஷால் - ஆர்யா நடிக்கும் எனிமி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக துபாயில் தற்போது நடைபெற்று வருகிறது. பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் சண்டைக்காட்சிகளுக்காக முன்னதாக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்துவரும் இந்த படத்தின் முக்கிய ஸ்டில் ஒன்று வெளியாகியுள்ளது. துபாயில் நடக்கும் படப்பிடிப்பில், 50 அடி உயரத்தில் இருந்து விஷால் குதிப்பதற்கு முன்பான ஷாட் ஒன்று படமாக்கப்படும் போது, விஷால் குதிக்கும் முன் எடுத்த ஸ்டன்னிங்கான ஸ்டில் தான் அது.
எஸ்.ராமகிருஷ்ணன், ஷான் கருப்பசாமி உள்ளிட்டோர் எழுத்துப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார். மினி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
ALSO READ: 'எப்படி இருந்த நாங்க'.. அந்தோணி தாசனின் குரலில் தூள் கிளப்பும் 'சுல்தான்' 3வது சிங்கிள்!