"நொறுங்கியிருக்கும் திரைத்துறைக்கு ஆக்ஸிஜன் தேவை!" - வாழ்த்துடன் விஷால் பதிவிட்ட ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே திமுக முன்னிலை வகித்து வந்தது. அதிமுக இரண்டாம் இடத்தில் இருந்தது. இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், தான் போட்டியிட்ட தொகுதியிலும், முக ஸ்டாலின் தான் போட்டியிட்ட தொகுதியிலும் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றனர். முடிவில் ஒட்டுமொத்தமாக திமுக வெற்றி பெற்றது.

இந்த வெற்றி உறுதியானதை அடுத்து பலரும் திமுகவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரைப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால், ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்த அருமையான வெற்றிக்கு திமுக கட்சிக்கு வாழ்த்துக்கள் & அன்பான நண்பர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கும்,  அன்பில் மஹேஷ்க்கும் வாழ்த்துக்கள். எங்கள் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்புக்கள்.

அடுத்த சில ஆண்டுகளில் வரவிருக்கும் நல்ல விஷயங்களுடன் தமிழ்நாடு வளரட்டும் மற்றும் நமது நொறுங்கிய திரைப்படத் துறைக்கு மிகவும் தேவையான ஆக்ஸிஜனை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ: "அயராது உழைத்து வெற்றி" - திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லி ரஜினி பரபரப்பு ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Vishal Congrats to udhayanithi and MK Stalin for DMK Victory

People looking for online information on DMK, MKStalin, Tamilnadu, TNElections2021, Udhayanidhi Stalin, Vishal will find this news story useful.