கடவுள் குரூரமானவன் - ஜே.கே.ரித்தீஸின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்தீஸ் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 46. அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களது ட்விட்டர் பக்கம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Vishal, Cheran, RJ Balaji, tweets about JK Rithesh

ஜே,கே.ரித்தீஸ் குறித்து நடிகர் விஷால், வாழ்கக்கை யாராலும் கணிக்க முடியாததாக இருக்கிறது.   என்னுடைய நல்ல நண்பன் இறந்துவிட்டார் என்கிற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. அவரது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஆழந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஜே.கே.ரித்திஸுடன் எல்கேஜி படத்தில் இணைந்து நடித்த ஆர்ஜே பாலாஜி,  நீங்கள் என்னை உங்களது சகோதரராக நடத்தினீர்கள். எல்கேஜி படத்தில் நடிப்பதற்காக 1 ரூபாய் கூட வாங்கவில்லை. அதிகமான அன்பை உங்களிடம் இருந்து பெற்றேன். நீங்கள் மிகவும் நல்ல மனிதர். உங்களை 3 குழந்தைகளுடன் கூடிய அழகான குடும்பத்தில் இருந்து பிரித்த கடவுள் குரூரமானவன். என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் சேரன், நண்பர் ஜேகே ரித்தீஸ்.... கேள்விப்பட்ட செய்தி இதயத்தை நொறுக்குகிறது... நீ உன்கூட இருந்தவுங்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த பணத்துக்கே இன்னும் 50 வருஷம் உயிரோட இருக்கனுமே... உன் தர்மம் கூட உன்னை காப்பாத்தலையே.... வருந்துகிறேன்... குறைந்தநாள் பழக்கம்தான்.. ஆனாலும் தாங்கமுடியவில்லை.. என்று பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

Vishal, Cheran, RJ Balaji, tweets about JK Rithesh

People looking for online information on Cheran, JK Rithesh, RJ Balaji, Vishal will find this news story useful.