'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக தமனும், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகரும், கலை இயக்குநராக டி.ராமலிங்கமும் பணிபுரிந்து வருகிறார்கள். இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார்.

இருமுகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் 'எனிமி' படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இரண்டாவது முறையாக சேர்ந்து நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டெம்பரில் இந்த படம் திரைக்கு வரும் என தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இயக்குநர் ஆனந்த் சங்கர் ஏற்கனவே, விக்ரம் பிரபு நடிப்பில் ‘அரிமா நம்பி’, விக்ரம் நடிப்பில் ‘இருமுகன்’, விஜய் தேவாரகொண்டா நடிப்பில் ‘நோட்டா’ படங்களை இயக்கியிருந்தார்.
சென்னை மற்றும் துபாயில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்த தருவாயில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (24.07.2021) 'எனிமி' படத்தின் டீசர் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. இதனை படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.