அரிமா நம்பி, நோட்டா ஆகிய படங்களின் இயக்குனர் ஆனந்த் சங்கர் விக்ரமை வைத்து இருமுகன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து இவர் இயக்கும் திரைப்படம் 'எனிமி'.
இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ திரைப்படத்தை அடுத்து, விஷால் மற்றும் ஆர்யா இரண்டாவது முறையாக சேர்ந்து நடிக்கும் இந்த படத்தில் ஆர்யா விஷாலுக்கு எதிரியாக நடிக்கிறார் என தெரிகிறது. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்துள்ள இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நெட்ஃபிளிக்ஸில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜி தொகுப்பில் சுதா கொங்காரா இயக்கிய ‘தங்கம்’ கதையாசிரியர் ஷான் கருப்பசாமி, எனிமி திரைப்படத்தின் எழுத்து பணிகளில் பணிபுரிந்துள்ளார்.
முன்னதாக செப்டம்பரில் ‘எனிமி’ படம் திரைக்கு வரும் என தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறைகளை முன்னிட்டு அக்டோபர் 14-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே விஷால், து.பா.சரவணன் இயக்கத்தில் தம்முடைய 31வது படமான ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் அண்மையில் தான் விஷாலின் பிறந்த நாள் அன்று வெளியானது.
இதேபோல் விஷால்32 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்திலும் விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள ராணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த #Vishal32 படத்தை வினோத்குமார் இயக்க, சாம் CS இசையமைக்கிறார்.
பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். A.வினோத்குமார் மற்றும் பொன் பார்த்திபன் வசனம் எழுதுகிறார்கள்.
Also Read: அடேங்கப்பா.. நம்ம ஏ.ஆர்.ரஹ்மானை மீசையோட பாத்துருக்கீங்களா? சும்மா வேற வெல்ல இருக்கு!