விஷால் - SJ சூர்யா இணையும் புதிய‌ PAN INDIA படம்.. ஹீரோயின் இவங்களா? போடு வெடிய

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால் , எஸ் .ஜே சூர்யா நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது !

Advertising
>
Advertising

விஷாலின் 33வது படமாக உருவாகும்  புதிய படமான 'மார்க் ஆண்டனி' படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.  விஷாலின் 'எனிமி' படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார் .மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார் 

விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில்  வர்மா ,நிழல்கள் ரவி  ஆகியோர் நடிக்கிறார்கள் .இசை அசுரன் ' ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்கம் உமேஷ் ராஜ்குமார் 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது . 

தொழில் நுட்பக்குழு :
எழுத்து & இயக்கம் -ஆதிக் ரவிச்சந்திரன்

தயாரிப்பு - S வினோத்குமார் மினி ஸ்டுடியோ

இசை - ஜி வி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு  - அபிநந்தன் ராமானுஜம்

படத்தொகுப்பு  - விஜய் வேலுக்குட்டி

கலை இயக்கம் - உமேஷ் ராஜ்குமார் .

சண்டைப்பயிற்சி - கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா

உடைகள் - சத்யா NJ

நடனம்  -தினேஷ் , அஸார்

பாடல்கள் - மதுர  கவி ,அஸல்  கோலாறு

நிர்வாக தயாரிப்பு - சொக்கலிங்கம் ,

மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்

புகைப்படம் - R S ராஜா

விளம்பர வடிவமைப்பு  -கபிலன்

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

விஷால் - SJ சூர்யா இணையும் புதிய‌ PAN INDIA படம்.. ஹீரோயின் இவங்களா? போடு வெடிய வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vishal and SJ Suryah 'Mark Antony' shoot with pooja today!

People looking for online information on Mark Anthony, Ritu Varma, SJ Suriya, Vishal will find this news story useful.