விருமன் படத்தின் “மதுரை வீரன்" பாடல் வீடியோ ப்ரோமோ.. அதிதி ஷங்கரின் அசத்தல் டான்ஸ் & VOICE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விருமன் படத்தின் மதுரை வீரன் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 'PS1' படத்தின் இறுதிக்கட்ட இசையமைப்பு பணிகள்.. A.R.ரஹ்மான் கொடுத்த சூப்பர் அப்டேட்!

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் , இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 
இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.

வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ’கஞ்சா பூவு கண்ணால’ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள மதுரை வீரன் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் இந்த வீடியோவில் தோன்றியுள்ளனர். இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா & அதிதி ஷங்கர் பாடியுள்ளனர். பாடலாசிரியர் ராஜூ முருகன் இந்த பாடலை எழுதியுள்ளார்

‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை மாநகரில் மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி இந்த இசை வெளியீட்டு விழா நடக்கிறது.

இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா,  இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா,
இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்  உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில், இரண்டு பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார்கள். ஒரு பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் - பாவனியும் நடனமாடுகின்றனர்.

Also Read | இளம் இயக்குனருடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு.. வெளியான புகைப்படங்கள்! பின்னணி தகவல்

விருமன் படத்தின் “மதுரை வீரன்" பாடல் வீடியோ ப்ரோமோ.. அதிதி ஷங்கரின் அசத்தல் டான்ஸ் & VOICE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Viruman Madura Veeran Video Song Promo

People looking for online information on Karthi, Viruman, Viruman Madura Veeran Video Song, Viruman Movie will find this news story useful.