செம்ம லுக்கில் கார்த்தி & அதிதி ஷங்கர்... மலேசியாவில் இருந்து வெளியான சூப்பர் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி & அதிதி ஷங்கர் மலேசியாவில் உள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’.

இந்தப் படத்தை நடிகர் சூர்யா & ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிதி ஷங்கர் இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.  ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர்.

‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில்  நடந்தது. இந்த விழாவில் படத்தின் டிரெய்லரும் பாடல்களும் வெளியிடப்பட்டது.

இந்த விருமன் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் பாரதிராஜா,  இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்  உட்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.

முன்னதாக விருமன் படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 60 நாட்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸை ஒட்டி நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் மலேசியாவில் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர். அங்கு கடற்கரையில் இருந்து படகில் உள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Viruman Karthi AditiShankar At Malaysia Promotions Today

People looking for online information on Adithi Shankar, Karthi, Viruman will find this news story useful.