"கடைக்குட்டி சிங்கம் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்த விருமன்" - வெளியான சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் கார்த்தி நடித்த 'விருமன்’ படம் நேற்று (12.08.2022) ரிலீஸ் ஆகி உள்ளது.

Viruman Box Office Collection from Distributor Sakthivel
Advertising
>
Advertising

கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படம், திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் பேராதரவால் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலான வசூலை பெற்று, வெற்றிக் கணக்கைத் தொடங்கி இருக்கிறது என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Viruman Box Office Collection from Distributor Sakthivel

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் வசூல், 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு கிடைத்த வசூலை விட மூன்று மடங்கு கூடுதல் என தகவல் வெளியானது. 

இதனால் உற்சாகமடைந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, இயக்குவர் முத்தையா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு மாலை அணிவித்து வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்.

கார்த்தி முத்தையா கூட்டணியில் உருவான 'விருமன்' வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘மாநகரம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண்  மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Viruman Box Office Collection from Distributor Sakthivel

People looking for online information on Karthi, Suriya, Viruman will find this news story useful.