BREAKING: விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா.. மதுரைல எங்கே நடக்குது? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யாவின் 2D Entertainment , நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் ‘விருமன்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | FANSக்கு அன்பு முத்தம் கொடுத்த அஜித்..திருச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் AK

வசூல் சாதனை படைத்த கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி விருமன்’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்தார்.

நடிகர் கார்த்தி திரைவாழ்வில் ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக, அவரை தமிழகம் முழுக்க கொண்டாட வைத்த படம் ‘கொம்பன்’.  இயக்குநர் முத்தையா இயக்கத்தில், குடும்ப உறவுகளின் பெருமை சொல்லும் படமாக, சிறப்பான கிராமத்து பின்னணியில் உருவான அப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இப்படம் மூலம் இணைந்தது.

முன்னதாக மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் 21ம் தேதி முடைவடைந்த இந்த படப்பிடிப்பு குறித்து பேசியிருந்த நடிகர் கார்த்தி, நீண்ட நாட்களுக்கு பின் மதுரை மக்களை பார்த்து சந்தோஷமடைவதாக முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரை மாநகரில் நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மதுரை மாநகரின் மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி இந்த இசை வெளியீட்டு விழா நடக்கும் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

விநாயகர் சதுர்த்தி அன்று ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி ரிலீஸ் செய்ய உள்ளது.

இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கி முடித்துள்ளார்.

நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகி வருகிறது.

Also Read | BREAKING: உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'மாமன்னன்' படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Viruman Audio Launch Planned at Raja Muthaiyah Mandram Madurai

People looking for online information on Karthi, Raja Muthaiyah Mandram Madurai, Viruman, Viruman Audio Launch, Viruman Movie Updates will find this news story useful.