VIRUMAN: "ஹோம்லி லுக்.. நீ தமிழ்நாட்டின் ANGEL ஆகிடுவ.." - அதிதி ஷங்கர் குறித்து பாரதிராஜா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜோதிகா & சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.

Advertising
>
Advertising

இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ர, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Also Read | "சூர்யா National Award வாங்கிட்டான்.. அடுத்து கார்த்தி" - வாழ்த்திய பாரதிராஜா

இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இணைகிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார். இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை மாநகரில் நடந்தது, படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி குறித்து பேசினார். அதில், “ஷங்கரின் மகள், படிச்சவ.. எம்.பி.பி.எஸ் டாக்டர். அவளை சினிமாவுக்கு ஷங்கர் அறிமுகம் செய்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

ஷங்கர் மகள் நடிகையா? என கேட்டேன். அப்றம் தான் தெரியவந்தது விருமன் குறித்து. விருமன் என் மண்ணை சேர்ந்தவன். கார்த்தி நல்ல டான்சர், நடிகர் என நல்லா தெரியும். ஷங்கர் மகள் புதியவர். ஷாக் ஆனேன்.  அவளுக்கு ஹோம்லி முகம். ஆனால் டான்ஸ் ஆடுறா பாருங்க.. அற்புதமான பெண்.. பிரமாதமான எதிர்காலம் வருவாள். அதிதி நீ தமிழ்நாட்டின் ஏஞ்சலாக வருவாய். அழகும் லட்சணமும் இருக்கிறது அதிதியிடம். நான் நல்ல ரசிகன். ஒரு நடிகைக்கு அழகு மட்டுமில்லாம் லட்சணமும் இருந்தால், அவள் மேலே வந்துவிடுவாள்.” என்று புகழாரம் சூட்டினார்.

Also Read | "முன்பே டைரக்டர் ஆயிட்டேன்.. ஆனா ஷங்கர் படமெடுக்க வந்ததும் பயந்துட்டேன்.!" - பாரதிராஜா.!

தொடர்புடைய இணைப்புகள்

Viruman Aditi Shankar homely look Angel of TN Says Bharathiraja

People looking for online information on 2D Entertainment, Aditi Shankar, Bharathiraja, Karthi, M Muthaiah, Suriya will find this news story useful.