ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | பாபாவை சந்தித்த பகவதி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி & விஜய் .. வைரலாகும் Throwback ஃபோட்டோ
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா பங்கேற்றுள்ளார்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினா, அதன் பின்னர் மகேஸ்வரி வெளியேறினர். கடைசியாக நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், 50வது நாளன்று ஞாயிற்று கிழமை எபிசோடில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க்காக, பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க் தரப்பட்டுள்ளது. இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா ஆகியோர் முதல் நாள் இருந்தனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் இருந்தனர். இவர்களின் அணி அடுத்தடுத்த நாட்களில் இடம் மாறக்கூடும்.
இதில்தான், ‘போக பிஸ்ஸா’ என்னும் விநோதமான ஆட்டம் பிரபலமாகியுள்ளது. இந்த ஆட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு தேவைப்படும் அதிசய பூ, ஏலியன்ஸ்களின் பகுதிலும், ஏலியன்ஸ்களுக்கு தேவைப்படும் அதிசயக் கல் பழங்குடிகளின் பகுதியிலும் இருக்கும். அந்த அதிசயக் கல் பழங்குடிகளின் உழைப்பில் தயாரிக்கப்படும். இதனால் ஒருவர் இன்னொருவரது ஏரியாவுக்குள் சென்று அவர்களுக்கு தேவையானதை எடுத்து வருவது இந்த டாஸ்கில் முக்கிய அம்சம்.
அப்படி போகும்போது அந்த போட்டியாளர் பிடிபட்டால், அவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து எதிரணியினர் தொடாமல் பேசியும் ரியாக்ஷன் பண்ணியும் டார்ச்சர் செய்வார்கள். பதிலுக்கு அந்த பிடிபட்டவர் ரியாக்ட் செய்தால் தோல்வி என அர்த்தம். அப்படியானால் என்ன பண்ண வேண்டும்? மாட்டிக்கொள்ளும் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்துவிட வேண்டும். ஆனால் மன திடகாத்திரத்துடன் எதிரணியினரின் டார்ச்சருக்கு ரியாக்ட் செய்யாமல் பஸ்ஸர் அடிக்கும் வரை இருந்தால் அவர்களுக்கு, தேவைப்படும் பொருளுடன் வெற்றியுடன் வெளியே செல்லலாம்.
இறுதியில் எல்லாம் முடிந்த பின் யாரிடம் அதிக கல் இருக்கிறதோ, அவர்கள் ‘நாமினேஷன் ஃப்ரீ ஜோன்’ உட்பட சில பல சலுகைகள் தருவார்கள்.
ஒவ்வொரு பழங்குடி அணியினரும் இதில் தங்களின் பெயர் பொறித்த குறிப்பிட்ட கல்லை, பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் பழங்குடி அணியினர் கார்டன் ஏரியாவிலும், ஏலியன்ஸ்கள் வீட்டிற்குள்ளும் இருக்கின்றனர். இவர்களின் எல்லை பார்டர் வரவேற்பறையின் கண்ணாடிக் கதவுதான். இதில் இந்த பழங்குடி அணியினரின் பழங்குடி தெய்வத்தின் பெயரே ‘போக பிஸ்ஸா’. அந்த தெய்வத்துக்கு பசி எடுக்கும் நேரத்தின் சத்தமும், அதேபோல் அங்குள்ள ஏலியன்ஸ்களின் பாட்டரி டவுன் ஆகும் சத்தமும் இதில் இருக்கும் கூடுதல் சுவாரஸ்யம்.
Also Read | Pushpa : ரஷ்ய மொழியில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா பாகம் -1’.. வெளியான டிரெய்லர்..