என்ன? 'பிதாமகன்' பட ஷூட்டிங்ல எடுத்த ஃபோட்டோவா இது? "எப்படி மிஸ் ஆச்சு??"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலா இயக்கத்தில் உருவான 'பிதாமகன்' திரைப்படம், அவரது இயக்கங்களில் வெளியான திரைப்படங்களில் மிக முக்கியமான ஒன்று.

அவருக்கு மட்டுமில்லாது, இந்த திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர்கள் சூர்யா, விக்ரம், சங்கீதா மற்றும் லைலா உள்ளிட்டவர்களுக்கு இது ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். அதே போல, விக்ரமிற்கும் தேசிய விருது கிடைத்திருந்தது.

இந்நிலையில், இசைகுஞானி இளையராஜாவுடன் இயக்குனர் பாலா, நடிகர்கள் சூர்யா மற்றும் விக்ரம் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் ஹிட்டடித்து வருகிறது.

நடிகர் சூர்யா தற்போது பாண்டியராஜ் இயக்கம் உட்பட மேலும் சில படங்களில் நடித்து வரும் நிலையில், மறுபக்கம் நடிகர் விக்ரம் 'கோப்ரா' ரிலீஸிற்காக வெயிட்டிங்கில் உள்ளார். படத்தின் நாயகியாக 'KGF' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யா விக்ரமுடன் இசைஞானி இளையராஜா இருக்கும் அசத்தல் புகைப்படம்| Viral throwback of Suriya, Vikram, Director Bala, Ilaiyaraja from pithamagan

People looking for online information on Director Bala, Pithamagan, Suriya will find this news story useful.