'ராக்கி' யாஷின் பிறந்த நாளில் வெளியான KGF-2 படத்தின் அடுத்த கொல மாஸ் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

KGF2: கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி இந்தியா முழுவதும் ஐந்து மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்ட பிரம்மாண்ட திரைப்படம் கே.ஜி.எஃப்.

Advertising
>
Advertising

கேஜிஎப் வரவு

கன்னட சினிமாவில் பெரும் சாதனையாக பார்க்கப்பட்ட இந்த படத்துக்கு தொடக்கத்தில் தமிழில் வரவேற்பு குறைவாகவே இருந்தாலும்,  படத்தை பற்றி பேச்சுகள் அனைவரிடத்திலும் சென்றடைந்ததை அடுத்து, தமிழிலும் இப்படத்துக்கு பார்வையாளர்கள் அதிகமாயினர்.

பஞ்ச் வசனங்கள்

குறிப்பாக இந்த படத்தில், ‘நான் பத்து பேர அடிச்சு டான் ஆனவன் இல்ல, நான் அடிச்ச பத்து பேருமே டான் தான்’, ‘கேங்க கூட்டி வர்றவன் கேங்ஸ்டர், ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்’ போன்ற வசனங்களை ராக்கி என்கிற கதாபாத்திரம் (யாஷ்) பேசும்போதும் சரி, பின்னர் கதாநாயகனின் அம்மா பேசும் வசனங்களான, ‘உன் பின்னாடி ஆயிரம் பேர் இருக்கிற தைரியம் இருந்தா உன்னால் ஒரு போர்லதான் ஜெயிக்க முடியும், அதே ஆயிரம் பேருக்கு நீ முன்னாடி இருக்கிற தைரியம் இருந்தா இந்த உலகத்தையே ஜெயிக்கலாம்’ போன்ற வசனங்களும் சரி, தெறி.

யாஷ் பிறந்த நாளில் KGF-2 அடுத்த போஸ்டர்

மாஸ், செண்டிமெண்ட், தேவையான அளவு காதல் என கமர்ஷியல் ஃபார்முலாவில்  உருவான ஒரு பிரம்மாண்ட மசாலா படமாகவே கேஜிஃப் இருந்தது. இந்நிலையில் தான் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் தயாராகி வந்தது. இந்நிலையில் நடிகர் யாஷின் பிறந்த நாளை ஒட்டி, ஒரு புதிய போஸ்டரை இன்று கேஜிஎப்-2 படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

வெளியீடு

இந்த போஸ்டரை தமது ட்விட்டரில் பகிர்ந்த கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் , ‘எச்சரிக்கை.. அபாயம்’ என்று சொல்லி இந்த போஸ்டரை பகிர்ந்துள்ளார். கேஜிஎப் படத்தின் 2-ஆம் பாகம், வரும் 2022, ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என இந்த போஸ்டரில் கூறப்பட்டிருக்கிறது.

Also Read: “இது சின்ன விசயம் இல்ல!.. வாழ விடுங்க”.. கொதித்த BiggBoss கேபி.. என்னென்ன கேக்குறாங்க பாருங்க!

தொடர்புடைய இணைப்புகள்

Viral KGF2 Poster is out HBD Rocking Star Yash கேஜிஎப்

People looking for online information on HBDRockingStarYash, KGF, Kgf 2, KGF2onApr, KGFChapter2, Prashanth Neel, Yash will find this news story useful.