“காலத்துக்கும் நிக்கும்…” விக்ரம் படத்தில் APPLAUSE அள்ளிய யுடியூபர்கள்… வெளியிட்ட வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 

Advertising
>
Advertising

விக்ரம் படத்தில் வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்தவர்கள் நடித்த காட்சி வரவேற்பைப் பெற்றிருந்தது.

விக்ரம் ரிலீஸ்…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு  ‘விக்ரம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரிலீஸூக்கு முன்பே வைரல் ஹிட் ஆகின. அதுபோல மிரட்டலான தீம் இசையும் கவனம் பெற்றுள்ளது. இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. இந்நிலையில் ஜூன் 3 ஆம் தேதி படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வரவேற்பு…

வெளியானது முதல் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது விக்ரம். குறிப்பாக நடிகர்கள் கமல், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதுபோலவே அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இவர்கள் தவிர படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர்களும் திரையரங்கில் ரசிகர்களிம் கைதட்டலைப் பெற்றுள்ளனர். விக்ரம் படத்தின் இடைவேளையில் இடம்பெறும் பிரபல யுடியூப் சேனலை சேர்ந்தவர்களான வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்தவர்கள் இடம்பெறும் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

நன்றி…

இந்நிலையில் வில்லேஜ் குக்கிங் சேனலைச் சேர்ந்தவர்கள் விக்ரம் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் “கமல் சார் படம் என்றாலே காலா காலத்துக்கும் நிக்கும். விக்ரம் படமும் அப்படி ஒரு படமாக இருக்கும். எங்களுக்கு வாய்ப்பளித்த லோகேஷ் சார், கமல் சார் ஆகியோருக்கு நன்றி. எங்கள் வீடியோவைப் பற்றி படப்பிடிப்புத் தளத்தில் பேசிப் பாராட்டிய விஜய் சேதுபதி அண்ணனுக்கும் நன்றி. நாங்கள் வரும் காட்சிகளை திரையரங்கில் மக்கள் கொண்டாடியதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளனர்.

வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் தமிழின் பிரபல யுடியூப் சேனல்களில் ஒன்றாகும். அவர்கள் பாரம்பரிய முறையில் உணவுகளை சமைக்கும் வீடியோக்கள் பலமுறை ஹிட்டடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

“காலத்துக்கும் நிக்கும்…” விக்ரம் படத்தில் APPLAUSE அள்ளிய யுடியூபர்கள்… வெளியிட்ட வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Village cooking channel vikram movie thanks video

People looking for online information on Kamal, Lokesh, Vijay Sethupathi, Village cooking channel will find this news story useful.