விக்ரம் வேதா இந்தி ரீமேக்! வெளியான மாஸ் BTS IMAGE! செம ஷூட்டிங் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லக்னோ: விக்ரம் வேதா இந்தி ரீமேக் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

தமிழ்  விக்ரம் வேதா

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. Neo Noir வகைமையில் உருவான இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விக்ரமாக மாதவனும், வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்தனர். இப்படத்திற்கு சாம் C.S இசையமைத்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் P S வினோத் ISC தமிழில் ஒளிப்பதிவு செய்து இருந்தார். Noir வகைமைக்கு ஏற்றாற் போல் மோனோ க்ரோம் டோனில் படத்தின் ஒளிப்பதிவு Colour Pallet அமைந்திருந்தது.

பிரபல OTT- யில் பொங்கலுக்கு வெளியாகும் புதிய ஆந்தாலஜி திரைப்படம்! செம ட்ரீட் இருக்கு!

விக்ரம் வேதா ரீமேக்

இந்த படத்தை இந்தியில் இயக்க இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி அதற்கான பூர்வாங்க வேலைகளை சில ஆண்டுகளுக்கு முன் துவங்கினர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு  (15.10.2021) அன்று துபாயில் தொடங்கியுள்ளது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து,அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தி விக்ரம் வேதா படக்குழு

புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் விக்ரம் மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், வேதா விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர். தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது என தற்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போடு வெடிய! கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் அப்டேட்! வைரலாகும் புதிய LOOK போஸ்டர்!

BTS

மேலும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு துபாயில்  27 நாட்கள் நடந்து நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் துவங்கியுள்ளது. இதில் சயிப் அலி கான், ஹிர்த்திக் ரோஷன் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. 19 நாட்கள் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சயிப் அலிகான் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

VikramVedha Hindi Remake second schedule wrapped up

People looking for online information on காயத்ரி பு, புஷ்கர் - காயத்ரி, விக்ரம் வேதா, Hrithik Roshan, Pushkar Gayathri, Saif Ali Khan, Vikram Vedha, Y Not Studio will find this news story useful.