உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரித்து, சீயான் விக்ரம் 'கடாரம் கொண்டான்'. இந்த படத்தில் அக்ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.
அபி ஹசன் கர்ப்பமான தனது மனைவி அக்சரா ஹாசனுடன் மலேசியாவில் வசிக்கிறார்.அவர் பணிபுரியும் மருத்துவமனையில் ஆக்சடென்ட் ஆகி அட்மிட் செய்யப்படுகிறார் விக்ரம். அக்சரா ஹாசனை கடத்தி வைத்துக் கொண்டு , விக்ரமை தங்களிடம் ஒப்படைக்குமாறு அபியை மிரட்டுகிறது ஒரு கும்பல்.
யார் அந்த விக்ரம் , அக்சரா ஹாசன் மீட்கப்படுகிறாரா இல்லையா என்பதை பரபர ஆக்ஷன் காட்சிகளுடன் சொல்லியிருக்கும் படம் தான் கடாரம் கொண்டான்.