BREAKING - சீயான் விக்ரமுக்காக குரல் கொடுக்க அவங்க ரெடி.!! - என்ன விஷயம் தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் குறித்து முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. 

Advertising
Advertising

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சீயான் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் விக்ரமுடன் ஶ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, இர்ஃபான் பதான் உள்ள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் கோப்ரா திரைப்படம் குறித்து ஒரு முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படம் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்படவுள்ளதாகவும், அதன் டப்பிங் உரிமையை கோல்ட் மைன்ஸ் கார்பரேஷன் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விரைவில் கோப்ரா படத்தின் ஹிந்தி டப்பிங் பணிகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்னர் கோப்ரா படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

விக்ரமின் கோப்ரா பற்றி வந்த செம நியூஸ் | vikram's cobra dubbing rights acquired by a major company

People looking for online information on Ajay Gnanamuthu, Cobra, Vikram will find this news story useful.