தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. சுமார் 70 நாட்களை இந்த நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், இனி வரும் நாட்கள் அனைத்து போட்டியாளர்கள் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அனைவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
இதில், ‘எல்லோரும் ஃப்ரீஸ்’ விளையாட்டை பிக் பாஸ் ஆட ஆரம்பிக்க, அப்போதுதான் அனைவருக்கும் சந்தேகம் வந்தது, ஆஹா இது அந்த டாஸ்க்ல்ல ? என்று. அவர்கள் எண்ணப்படியே அது விருந்தினர் வரும் டாஸ்க் தான். ஆனால் என்ன? விருந்தினர்கள் வரும்போது எவ்வளவு பெரிய ஆசையையும் அன்பையும் பாசத்தையும் உணர்ச்சியையும் கட்டுப்படுத்திக்கொண்டு ஃப்ரீஸ் ஆகி பிக்பாஸின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நிற்க வேண்டும். ஃப்ரீஸ், ரிலீஸ், லூப் என பிக்பாஸ் வார்த்தைகள் இறுக்க கட்டிப்ப்போட, அவர் உத்தரவு கொடுத்த பிறகே அதில் இருந்து ரிலீஸ் ஆகி, அவரவர் விருந்தினர்களுடன் சென்று உறவாட முடியும்.
இதில் கூடுதல் விஷயம் என்னவென்றால், கருப்பு கண்ணாடி. ஆம், அந்த கண்ணாடி அணிந்துகொண்டால், வருபவர்கள் யார் என்பதே தெரியாது. முன்னதாக ஷிவினை பார்க்க அம்மாவும் அக்காவும் சில காரணத்தால் வரமுடியாமல் போனதாக சொல்லப்பட்டது. ஆனால்‘கூடப் பொறக்காத அக்கா’வான நிவேதா மற்றும் அவருடன் கண்ணன் என்பவர் வந்திருந்தனர். அப்போது ஷிவின் நன்றாக ஆடுவதாகவும், இன்னும் கொஞ்சம் ஜாலியாக விளையாட வேண்டும் என்றும் அவர்கள் அட்வைஸ் கூறினார்கள். வார்த்தைகளின் மீது கவனம் வைக்கச் சொல்லி எச்சரிக்கை மணியும் அடித்தனர். பின்னர் விடைபெற்றனர்.
எனினும் தம் குடும்பத்தினர் வராததால், கண்கலங்கிய ஷிவினுக்கு ரச்சிதா ஆறுதல் கூறி நெகிழ்த்தினார். ரச்சிதாவின் அம்மாவோ, “நீயும் என் மகள்தான்” என ஷிவின் மீது அன்பை பொழிந்தார். இன்னொரு பக்கம், விக்ரமனின் பெற்றோர்கள் வந்த போது, ஷிவினிடம் பேசும் விக்ரமனின் தந்தை, "நீ ஒண்ணும் கவலைப்படாத. நாங்க எல்லாரும் இருக்கும் என்ன. கேம் முடிஞ்சதுக்கு அப்புறம் வீட்டுக்கு எல்லாம் வா. உன்னோட Guts ரொம்ப பயங்கரமா இருந்தா பெரிய அளவுக்கு நீ வெற்றி அடைவே" என தெரிவிக்கிறார்.