ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Also Read | விக்ரமன் பேச்சை கேட்டு மைனா சொன்ன விஷயம்.. என்னங்க சாபம்-லாம் விடுறாங்க😅..!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்களில் யார் இறுதி சுற்று வரை செல்வார்கள் என்பது பற்றி பேசி வருகின்றனர். அந்த வகையில் விக்ரமன் குறித்து கதிர் பேசியுள்ளார். அப்போது கதிர்,"பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போது விக்ரமன் பற்றிய எனது கண்ணோட்டம் வேறு விதமாக இருந்தது. இதுபற்றி அவரிடமே நான் பேசியிருக்கிறேன். ஆனால், சூழலை அவர் கையாளும் விதம் எனக்கு பிடித்திருந்தது.
இருப்பினும், அவரை பற்றிய எதிர்மறை விமர்சனங்களை அவர் எதிர்கொள்ளும்போது அவர் பின்தங்குவதை கவனித்திருக்கிறேன். அதற்கு பிறகு அந்த விஷயத்தை அவர் மாற்றிக்கொண்டார். சமீபத்திய டாஸ்க்களிலும் அவர் செயல்பட்ட விதம் அருமையாக இருந்தது. போட்டியில் திறமையை காட்டும் அதே நேரத்தில், ஒரு விஷயத்தை அணுகுவதிலும், அதை எடுத்துக்கொள்ளும் விதத்தையும் அவர் மாற்றியிருக்கிறார். அதனால் அவர் இறுதி சுற்றுக்கு செல்ல தகுதியானவர் என்று நினைக்கிறேன்" என்கிறார். இதனை சக போட்டியாளர்கள் உற்று கவனிக்கின்றனர்.
Also Read | ஷிவின் பத்தி அமுது - விக்ரம் பேசும்போது.. டக்குன்னு கோபப்பட்ட ரச்சிதா..!