தலைவன் GP முத்துவுக்கே COUNTER கொடுத்த விக்ரமன்.. மனுஷன் ஃபுல் FUN மோடுல இருக்காப்ல!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து வருவது பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஹவுஸ்மேட்ஸ் எல்லாரையும் பத்தி ADK -வின் RAP பாடல்.. அசந்துபோன போட்டியாளர்கள்..!

முன்னதாக கடந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி இருந்தார். இதற்கு மத்தியில்,   Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் Guest ஆக வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும் கலகலப்பாக மாற்ற நிறைய ஜாலியான விளையாட்டையும் பிக் பாஸ் அறிவித்து வருகிறார். இப்படியாக இந்த வாரம் முழுவதும் அட்டகாசமாக பிக் பாஸ் நிகழ்ச்சி நகர்ந்த வண்ணம் உள்ளது. அதே போல, அனைத்து போட்டியாளரும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் ஜிபி முத்து மற்றும் மைனா நந்தினி ஆகியோரிடையே ஜாலியாக நடக்கும் லவ் Proposal காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

ஜிபி முத்து, மைனா நந்தினி, விக்ரமன், அமுதவாணன் ஆகியோர் அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது உன்னுடைய காதலை மைனா நந்தினியிடம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் ஜிபி முத்துவுடன் அமுதவாணன் தெரிவிக்கிறார். அப்போது பேசும் ஜிபி முத்து, பார்வையிலேயே காதலை வெளிப்படுத்த வேண்டுமா என்பது போல ஜாலியாக கூறுகிறார். தொடர்ந்து, என்னை பத்தி என்ன நினைக்கிறீங்க என ஜிபி முத்து கேட்டதும், "பாக்குறதுக்கு நல்லா காமெடியா பேசுறீங்க" என மைனா நந்தினி குறிப்பிடுகிறார்.

"நம்ம ரெண்டு பேரும் முதன் முதலில் சந்திக்கிறோம். உங்களுக்கும் கல்யாணம் ஆகல, எனக்கும் கல்யாணம் ஆகல. உங்களுக்கு இதே மாதிரி கணவர் வரணும்னு நினைச்சீங்களா?" என ஜிபி முத்து மைனாவிடம் கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் மைனா நந்தினி, "என்ன எப்பவுமே பாராட்டிக்கிட்டே இருக்கணும். உங்களுக்கு தெரிஞ்ச யாராவது பையன் இருக்காங்களா?" என கேட்க மறுகணமே, "அவர் பையனே இருக்காங்க" என விக்ரமன் ஜாலியாக தெரிவிக்கிறார்.

இதனைக் கேட்டதுமே ஜிபி முத்து, மைனா நந்தினி உள்ளிட்ட அனைவரும் சிரிக்க தொடங்குகின்றனர். ஜிபி முத்துவுக்கு விக்ரமன் கொடுத்த கலாய் தொடர்பான விஷயம் தற்போது பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

"என்னது, விக்ரமன் பொய் சொன்னாரா?".. பழைய சம்பவத்தை தோண்டி எடுத்த போட்டியாளர்!!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman thug life response to gp muthu love proposal

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, GP MUTHU, Myna Nandhini, Vikraman will find this news story useful.