“காஸிப் பேசுறது யாரு?” - அசிம் பேர சொன்ன விக்ரமன்.. பதிலுக்கு அசிம் கொடுத்த பரபரப்பு கமெண்ட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

Advertising
>
Advertising

Image Credit :  vijay television

Also Read | இளையராஜா இசையில், கிருத்திகா உதயநிதி இயக்கிய விழிப்புணர்வு பாடல்.! பாடிய யுவன்..

இந்த சீசனில் மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த நிலையில், அனைத்து எபிசோடுகளும் விறுவிறுப்பாகவும் நிறைந்த படி சென்றது.

இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

Image Credit :  vijay television

மொத்தமுள்ள போட்டியாளர்களில் இருந்து அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர், Finale சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். இதில், ஷிவின் 3 ஆவது இடம் பிடித்திருந்தார். இதற்கடுத்து, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அசிம் டைட்டில் வின்னர் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். மேலும் அவருக்கு 50 லட்ச ரூபாயும், காரும் பரிசாக வழங்கப்பட்டிருந்தது.

Image Credit :  vijay television

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், பிக்பாஸ் 6வது சீசன் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களுள் ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் காஸிப் பேசும் போட்டியாளர் யாரென கேட்டபோது, விக்ரமன், அசிமை குறிப்பிட்டுகிறார்.

Image Credit :  vijay television

அதன் பிறகு பேசும் அசிம், “பேசுறவங்களே ஆயிரம் காஸிப் பேசுறாங்க. அவங்க சொல்லும்போதுதான் சிரிப்பா இருக்கு எனக்கு” என சொல்கிறார். அதன் பிறகு வாட்டமான விக்ரமனின் முகம் காட்டப்படும் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சி வரும் பிப்.12-ஆம் தேதி ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Also Read | Anikha Surendran : அடுத்தடுத்து கலக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா.. ஒரே மாதத்தில் 2 படம் ரிலீஸ்..!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman tells azeem name for gossip azeem answer bigg boss

People looking for online information on BB Kondattam, Bigg Boss 6, Bigg Boss Tamil 6 Bigg Boss Tamil will find this news story useful.