முதன்முறையாக தனது குடும்பம் பத்தி உருக்கமாக பேசிய விக்ரமன்.. எமோஷனல் ஆன போட்டியாளர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், விக்ரமன் தனது குடும்பத்தினர் பற்றி உருக்கமாக போட்டியாளர்களிடம் பேசி இருக்கிறார்.

Vikraman Talks his family and the experience he got in his Journey
Advertising
>
Advertising

Also Read | "என்னால முடியும்".. Confident-ஆ பேசிய மைனா.. பிக்பாஸ் சொன்ன நெகிழ வைக்கும் வார்த்தை..! 

90 நாட்களை கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்போதைய சீசன் 6 ஃபைனலை நெருங்கியுள்ளது. கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் விக்ரமன், மைனா, அசீம், அமுதவாணன், ஷிவின் ஆகியோர் இடையே டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. முன்னதாக பிக் பாஸ் வீட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பண மூட்டையை எடுத்த கதிர் தான் வெளியேறுவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

Vikraman Talks his family and the experience he got in his Journey

அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 6-ல் முதல் தடவையாக பணப் பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பைனலிஸ்ட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் பெட்டியுடன் வெளியேறலாம் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், வீட்டுக்குள் இன்னும் நட்பாக இருந்திருக்கலாம் என நினைக்கும் நபருக்கு கையில் சிவப்பு வண்ண பட்டை ஒன்றை கட்டுமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியாளர்கள் நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தனர்.

இந்த சூழ்நிலையில் விக்ரமன் முதன்  முறையாக தனது குடும்பத்தினர் பற்றி பிக் பாஸ் வீட்டில் பேசி இருக்கிறார். அப்போது அவர் ஆரம்பத்தில் தான் ஐடி நிறுவனத்தில் பணி செய்து வந்ததாகவும் அதன் பின்னர் பத்திரிகை துறைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய முடிவுகளுக்கு தனது குடும்பத்தினர் எப்போதும் பக்கபலமாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், பொதுவாக தான் தனது குடும்பத்தினர் பற்றி பேசுவதில்லை எனவும் தனது வேலை தன்னுடைய குடும்பத்தினருக்கு எந்த விதத்திலும் ஆபத்தாக இருக்கக்கூடாது என்ற பயம் தனக்குள் எப்போதும் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,"ஊடக துறையில் எனக்கு சிக்கல்கள் வந்த போதிலும் குடும்பத்தினர் எனக்கு எப்போதும் சப்போர்ட் பண்ணாங்க. நான் சாதரண பின்புலத்தில் இருந்து வந்தவன். அரசியலுக்கு போகும்போதும் அவங்க ஒண்ணுமே சொல்லல. உண்மையாவே இந்த போட்டிக்கு என் அப்பா, அம்மா வரக்கூடாதுன்னு நெனச்சேன். ஏன்னா, இங்க இருக்க வெளிச்சம் அவங்க கண்களை கூச வச்சிடுமோ-ன்னு பயம் இருந்துச்சு" என்றார். மேலும், தனது சகோதரி பற்றி பேசிய விக்ரமன் பல விஷயங்கள் பற்றி தனது தங்கையுடன் விவாதித்திருப்பதாகவும் அவரை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார். இதனை கேட்ட போட்டியாளர்கள் கரகோஷம் எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினர்.

Also Read | "அந்த விஷயத்துல வெற்றி கிடைக்கல. அதுதான் உண்மை"... மவுனம் கலைத்த விக்ரமன்..BiggBoss

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman Talks his family and the experience he got in his Journey

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Vikraman will find this news story useful.