ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | இரும்பு மாதிரி இருந்த நம்ம விக்ரமனை வந்ததுமே வெட்கப்பட வச்ச DD 😍.. அப்படி என்ன சொன்னாங்க..!
இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா, நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.
இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என சொல்லப்பட்டிருந்தது.
அதேபோல, அமுதவாணனுக்கு தனது தலைமுடிக்கு கோல்டன் நிறத்தில் வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.
இதனிடையே போகி பண்டிகையை முன்னிட்டு சிறிய டாஸ்க் ஒன்றும் இருந்தது. அப்போது, விக்ரமன் தனக்கு வழங்கப்பட்ட காகிதத்தில் 'சமூக ஏற்றத்தாழ்வுகள்' என எழுதி அதனை கிழித்து வைக்கப்பட்டிருந்த கூடையில் வீசினார். இதுபற்றி அவர் பேசுகையில்," இந்த பேப்பர்ல நிறைய எழுதியிருக்கேன். வெளியில சமூக ஏற்றத்தாழ்வுகள்-னு எழுதியிருக்கேன். மனிதனை மனிதனா பார்க்க தடையாக இருக்கக்கூடிய நிறைய விஷயங்கள் இருக்கு. ஜாதி, மதம், மொழி, இனம், பாலினம் பாலின ஈர்ப்பு அப்படின்னு நெறையா இருக்கு. இந்த ஏற்றத்தாழ்வுகள் அத்தனையும் ஒழியனும்னு நான் விரும்புறேன். போகி பண்டிகையில் பழையன கழிதல் அப்படின்னா என்னை பொறுத்தவரையில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் தான் பழையனவாக இருக்கணும். இது மொத்தமும் கொளுத்தி தூக்கி எறியனும்-னு நெனைக்கிறேன் சார்" என்றார்.
அப்போது, கமல் ஹாசன்,"நீங்க சொல்றதை செய்யனும்னா வெளியில நிறைய வேலைகள் இருக்கு உங்களுக்கு. உங்களுக்கு இது ஒரு நல்ல தளம். நீங்க விரும்பும் விஷயங்களை சொன்னா கேக்குற குரலை மக்களே கொடுத்திருக்காங்க. அதை பயன்படுத்திக்குங்க. ஆனா, அதை உடனே வந்து பண்ண முடியாதுங்குறது அவங்களோட முடிவு. ஏன்னா நீங்க Save " எனச் சொல்ல சந்தோஷமடைந்த விக்ரமன் மக்களுக்கும் கமலுக்கும் நன்றி தெரிவிக்கிறார்.
Also Read | Varisu : சக்ஸஸ் மீட்டில் விஜய்யின் 'வாரிசு' பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி உருக்கம்..!