நெஞ்ச நிமித்திட்டு இருப்பாரு. அவரையே பயமுறுத்திட்டாங்கப்பா.. போட்டியாளர் செய்த காரியம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | நெஞ்ச நிமித்திட்டு இருப்பாரு... அவரையே பயமுறுத்திட்டாங்கப்பா.. போட்டியாளர் செய்த காரியம்.. அலறிய விக்ரமன்..!😅  

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி மற்றும் மணிகண்ட ராஜேஷ் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

இதனிடையே, Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசீமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இந்நிலையில், அமுதவாணனுக்கு ஹேர் ஸ்டைலை மாற்றும்படி சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்ய சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் சப்ரைசாக என்ட்ரி ஆகியுள்ளார் குயின்சி. வீட்டுக்குள் புதிதாக யாராவது வரும்போது பொதுவாக பாடல்கள் ஒலிக்கும். ஆனால், சைலண்டாக உள்ளே வந்திருக்கிறார் குயின்சி. வீட்டுக்குள் இருக்கும் அறைக்குள் அவர் நிற்க, எதேச்சையாக அந்த அறையின் கதவை திறக்கிறார் விக்ரமன். அப்போது, உள்ளே இருந்து குயின்சி சத்தம் எழுப்ப, விக்ரம் பயந்து போகிறார்.

பின்னர் சிரித்தபடியே அங்கிருந்து வேகமாக செல்கிறார் விக்ரமன். அதன் பிறகு வெளியே வரும் குயின்சியிடம் "ஏம்மா இப்படி பண்ற?" என சிரித்தபடியே கைகுலுக்குகிறார். இதனை தொடர்ந்து, அங்கு வரும் சக போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் குயின்சியை வரவேற்கின்றனர். அப்போது பிக்பாஸ்,"குயின்சி வெல்கம் பேக்" என்கிறார். அதற்கு குயின்சி புன்னகைத்தபடி நன்றி சொல்கிறார்.

Also Read | என்னப்பா இது விக்ரமனுக்கு வந்த சோதனை.. சைகைல படம் பெயர் சொல்லணும்.. FUN மோடில் போட்டியாளர்கள்..!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman Surprised after seeing queency in Biggboss House

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Biggboss House, Queency, Vijay tv, Vikraman will find this news story useful.