"விக்ரமனோட அந்த முகத்தை யாரும் பார்க்கல".. விக்ரமனின் சகோதரி சொன்ன விஷயம்.. EXCLUSIVE..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்த விக்ரமன், நமது சேனல் நடத்திய Fans Meet-ல் கலந்துகொண்டார். அப்போது அவர் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். 

Advertising
>
Advertising

                      Images are subject to © copyright to their respective owners.

Also Read | "பூமர் விக்ரமன்-னு எல்லாம் பேசுறாங்க.. அது ரொம்ப தப்பு".. அசீம் Exclusive..!

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் இறுதி சுற்றுக்கு அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் எப்போதும் இறுதியில் இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே கிராண்ட் ஃபினாலே-விற்குள் நுழைவது வழக்கம். ஆனால் கடந்த சீசனில் முதன்முறையாக அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேரும் கிராண்ட் ஃபினாலே-விற்குள் நுழைந்தனர். இந்த மூவரில் வெற்றி பெறப் போவது யார் என ரசிகர்களிடையே சமூக வலைத் தளங்களில் பெரும் விவாதமே நடைபெற்று வந்தது. அப்போது பிக்பாஸ் சீஸனின் வெற்றியாளராக அசீமை அறிவித்தார் கமல்ஹாசன்.

இந்நிலையில், விக்ரமன் Fans Meet -ஐ நமது சேனல் நடத்தியது. இதில் விக்ரமன் தனது பெற்றோருடன் கலந்துகொண்டார். அப்போது, பிக்பாஸ் அனுபவங்கள் குறித்து விக்ரமன் பேசியிருந்தார். இடையே அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவருடைய சகோதரி தமிழரசி வீடியோ காலில் நிகழ்ச்சியில் இணைந்தார்.

அப்போது பேசிய விக்ரமனின் சகோதரி தமிழரசி,"விக்ரமன் டான்ஸ் ஆடுவதை பலரும் ஆச்சரியமா பேசினாங்க. ஆனா அதுல எனக்கு எந்த ஆச்சரியமும் கிடையாது. சின்ன வயசுல டேப் ரெக்கார்டர் இருந்தபோது ரெண்டு பேரும் பல பாடல்களுக்கு டான்ஸ் ஆடி இருக்கோம். அப்போ எல்லாம் அவர்தான் என்னோட கோரியோகிராஃபர். அவர் எப்போதும் ஜாலியான ஒரு ஆள் தான். அவருடைய அந்த முகம் பலருக்கும் தெரியல" என்றார்.

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து தங்கைக்காக ஒரு பாடல் பாடும் படி விக்ரமனிடம் கேட்கப்பட்டது. அப்பொது தன்னை விட தனது சகோதரி நன்றாக பாடுவார் என விக்ரமன் கையை காட்டிவிட, அவரது சகோதரியும் முதல் மரியாதை படத்தில் இருந்து 'ராசாவே உன்னை எண்ணி' என்னும் பாடலை பாட அரங்கமே ஆச்சரியப்பட்டு போனது. இதனையடுத்து விக்ரமன் 'தேவர் மகன் பாடத்தில் இருந்து இஞ்சி இடுப்பழகி பாடலையும் பாடி அசத்தினார்.

Also Read | "பெண்களை அப்படி பேசுனேனா?".. Live-ல தனலட்சுமிக்கு போன் செஞ்ச அசீம்..!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman sister Thamilarasi about her brother Fun face

People looking for online information on Vikraman, Vikraman Sister, Vikraman sister Thamilarasi will find this news story useful.