தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Also Read | "விக்ரமன நாமினேட் பண்ணல, ஏன்னா".. பிக் பாஸ் சீசனின் கடைசி நாமினேஷன்.. பரபர சம்பவம்!!
மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்து நிறைய விஷயங்களை பேசி இருந்தார். அப்போது ஒரு சில டாஸ்க்குகள் கூட நடைபெற்றிருந்தது. இதில், நிறைய போட்டியாளர்கள் அசிம் குறித்து பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டிருந்தனர். அசிம் அதிகம் கோபப்படுவதாகவும், கோபப்பட்டு அனைத்தையும் கூறி விட்டு பின்னர் மன்னிப்பு கேட்டாலும் அடுத்தடுத்த வாரங்களில் அதையே திரும்ப செய்வதாகவும் சில போட்டியாளர்கள் தங்களின் கருத்தை முன் வைத்திருந்தனர்.
இந்த நிலையில், இது குறித்து போட்டியாளர்கள் மத்தியில் பேசி இருந்த அசிம், "இனி எவன் கூட சண்டை போட்டாலும், வீட்டுல இருந்து போறது வரை பேச போறதே இல்லடா. ஸாரியும் கேக்க போறதில்ல" என தெரிவிக்கிறார். அப்போது பேசும் ரச்சிதா, "ஆக மொத்தத்துல சண்டை போடமாட்டேன்னு சொல்ல மாட்டீங்க" என சிரித்துக் கொண்டே குறிப்பிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து பேசும் அசிம், "சண்டை போட்டா விட மாட்டேன். வெச்சு செய்வேன். சண்டைன்னு வந்தா டபுள் டைம் வெச்சு செய்வேன் நானு. அதுக்கு எல்லாம் பயப்படுற ஆளு நான் கிடையாது" என கூறி முடித்ததும் "வாங்கிட்டு போற ஆளு நாங்களும் கிடையாது" என விக்ரமன் பதில் கருத்தை தெரிவிக்கிறார். இதன் பின்னர், "பார்ப்போம், பார்ப்போம்" என அசீமும் கூறுகிறார்.
Also Read | "அசிம் Finale ஜெயிக்க தகுதி இல்ல".. கமல்ஹாசன் முன் லிஸ்ட் போட்டு அடுக்கிய விக்ரமன்!!.. Bigg Boss