ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | "அவரு ஹீரோ ஆகுறதுக்கு, நாங்க அசிங்கப்படணுமா?".. விக்ரமனிடம் பேசிய மகேஷ்வரி.. யாரை சொல்றாங்க?
இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா, நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.
இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.
இந்நிலையில், வீட்டுக்குள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் வீட்டுக்குள் முட்டை விவகாரத்தில் போட்டியாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அதுபற்றிய பேச்சாகவே இருக்கிறது. இதனிடையே பிக்பாஸ் போட்டியில் இறுதி கட்டம் வரை வந்துள்ள போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதிய ஏற்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 6 போட்டியாளர்களும் தங்களுக்கு தேவையான உணவுகளை பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள காது போன்ற இடத்தில் நின்று சொல்லலாம். பிராண்ட்-இன் பெயரையோ உணவகத்தின் பெயரையோ குறிப்பிட கூடாது எனவும் போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை மட்டும் சொல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விக்ரமன் தனக்கான பட்டியலை சொல்லியிருக்கிறார்.
வீட்டினுள் வைக்கப்பட்டுள்ள அந்த இடத்துக்கு சென்ற விக்ரமன்,"பீஃப் பிரியாணி, பீஃப் ஃப்ரை, வஞ்சிரம் ஃப்ரை, வெங்காய பச்சடி, கத்தரிக்கா கொத்து, ப்ரெட் அல்வா" ஆகியவை வேண்டும் என கூறியுள்ளார். இதுபோல, மற்ற போட்டியாளர்களும் தங்களுக்கு தேவையான உணவுகளை பட்டியலிட்டு வருகின்றனர்.
Also Read | "கிளம்பு காத்து வரட்டும்".. ஆக்ரோஷமான அசீம்.. "நாகரீகமா பேசுங்க".. விக்ரமன் பதிலடி.. திரும்பவுமா??