LEO LEO LEO.. செம்ம ஸ்டைலா.. கெத்தா.. வைரலாகும் பிக்பாஸ் விக்ரமனின் போட்டோ ஷூட் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட விக்ரமனின்  போட்டோ ஷூட் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | மத்திய அரசு நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு.. குஷ்புவை வாழ்த்தி மெகாஸ்டார் ட்வீட்.!   

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ், நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்,  கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, ஈழத்தை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அசிம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட 3 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர். இந்த இறுதி போட்டியில் அசீம்    பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் கமல்ஹாசனால்  அறிவிக்கப்பட்டார். அசீம்க்கு பரிசாக மாருதி சுசூகி பிரேஸா காரும், 50 லட்ச ரூபாய் காசோலை, வெற்றிக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஆவார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் விக்ரமன் கலந்து கொண்டு வருகிறார்.

Also Read | இணையத்தை கலக்கும் "டும் டும்" பாட்டு.. ஒன்னா Dance ஆடிய சித்தார்த், அதிதி.. ஹன்சிகாவின் கமெண்ட் 🥰

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman Latest Photoshoot video went viral on social media

People looking for online information on Vikraman, Vikraman Latest Photoshoot will find this news story useful.