"AD ஷூட்ல பிஸி".. குயின்சி சொல்லி முடிச்சதும் விக்ரமன் கமெண்ட்.. மனுஷன் தமாஷா பேசுறாப்ல 😂

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து வருவது பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "சும்மா ஒண்ணும் வெளிய அனுப்பல!".. எலிமினேஷன் பற்றி மனம்திறந்த தனலட்சுமி

முன்னதாக கடந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி இருந்தார். இதற்கு மத்தியில்,   Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் Guest ஆக வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், குயின்சியை கலாய்த்து ஜாலியாக விக்ரமன் பேசிய விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது.

உள்ளே சர்ப்ரைஸாக வந்த குயின்சி, உற்சாகமாக அனைத்து போட்டியாளர்கள் மத்தியிலும் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில், ஏடிகே, விக்ரமன், கதிரவன், அசல் கோலார், குயின்சி உள்ளிட்டோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது குயின்சியின் Career குறித்து பேச்சு வர, அவர் தற்போது நிறைய விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருப்பது பற்றியும் அங்கே கூறுவதாக தெரிகிறது.

இதனைக் கேட்டதும் குயின்சியை கலாய்க்கும் விதமாக, "ஜொலிக்குதே, ஜொலி ஜொலிக்குதே AD எல்லாம் இருக்கா?" என சிரித்துக் கொண்டே கேட்கிறார் விக்ரமன். இதற்கு குயின்சியும் சிரித்தபடியே, "சொக்க வைக்கும் ஜுவல்லரி" என குறிப்பிடுகிறார். மேலும் அனைத்து போட்டியாளர்களும் வெயிட் குறைந்து விட்டதாகவும் குறிப்பிடும் குயின்சி, மல்லிப்பூ பாட்டுக்கு விக்ரமனுடன் இணைந்து ஆடி இருந்தது சூப்பர் ஹிட் ஆனதாகவும் அவர் கூறி இருந்தார். இது தவிர இன்னும் நிறைய கலகலப்பான விஷயங்களையும் அவர்கள் பேசிக் கொண்டே இருந்தனர்.

Also Read | "ரச்சிதாவ நான் கலாய்க்குறேன்ல, மாஸ்டருக்கு கபகபன்னு".. Jolly-ஆ இருந்த வீட்ல தொடங்கிடுச்சு ரகளை

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman fun reply to Queency about her ad shoots bigg boss

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Biggboss House, Queency, Vijay tv, Vikraman will find this news story useful.