ரஞ்சிதமே விஜய் ஸ்டைலில் FLYING KISS.. "விக்ரமன் கொடுத்ததும் மைனாவோட ரியாக்ஷன பாக்கணுமே"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "மனைவி, பொண்ணு ரெண்டு பேருமே உங்க தீவிர Fans".. சொல்லாம போனா அடிப்பாங்க.. மாகாபா கலகல!!😍

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

இது தவிர DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வீட்டையே கலகலப்பாக மாற்றியும் வருகின்றனர். அவர்கள் பல பாசிட்டிவ் Vibe-களையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் டிடி என்டரி கொடுத்து வலம் வந்த சமயத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருந்தது.

இதனிடையே, தற்போது சில ஹவுஸ்மேட்ஸ் இடையே வாக்குவாதங்களும் அரங்கேறி வருகிறது. இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் பல்வேறு விறுவிறுப்பான நிகழ்வுகளுடனும் சென்ற வண்ணம் உள்ளது. அதே போல, Finale வில் டைட்டில் வின்னராக போகும் நபர் யார் என்பதையும் ஒரு பக்கம் பார்வையாளர்கள் கணித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், விஜய் ஸ்டைலில் விக்ரமன் கொடுத்த Flying Kiss ஒன்று தற்போது அதிக வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் "வாரிசு" திரைப்படம் வெளியாகி இருந்தது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை இந்த திரைப்படம் பெற்று வரும் நிலையில், விஜய்யின் டான்ஸ், காமெடி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் மக்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

மேலும் வாரிசு படத்தில் வரும் ரஞ்சிதமே என்ற பாடலில், சற்று ஸ்டைலாக Flying kiss ஒன்றை விஜய் கொடுத்திருப்பார். இதனை இசை வெளியீட்டு விழா மற்றும் ரசிகர்கள் சந்திப்பின் போதும் செய்து காட்டி இருந்தார் விஜய். இது பெரிய அளவில் ரசிகர்களையும் இது கவர்ந்திருந்தது.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் விக்ரமன், அதே போல Flying kiss ஒன்றை கொடுத்துள்ளார். இதனை பார்த்ததும் அவர் அருகே இருக்கும் மைனா நந்தினி, விக்ரமனை சற்று வியந்து போயும் பார்க்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது .

Also Read | தனா-வ இப்படியா Bigg Boss கூப்பிட்டாரு?.. வேகமா ஓடிய தனலட்சுமி.. அவரு சொன்னா கரெக்டா தான் இருக்கும்

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman flying kiss like ranjithame vijay viral

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Myna Nandhini, Ranjithame Song, Vikraman, Vikraman flying kiss like ranjithame will find this news story useful.