"கோபத்துல பேசுனது, மனசுல வெச்சுக்காதீங்க".. அசிம் அப்டி சொன்னதும் விக்ரமன் அப்பாவின் பதில்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.

Advertising
>
Advertising

Also Read | ரச்சிதா - அசீம் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. பரபரப்பான ஹவுஸ்மேட்ஸ்..!

இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். விக்ரமன் மற்றும் கதிரவனின் பெற்றோர்கள், அசிமின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளனர்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.

இதனிடையே, விக்ரமனின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்தனர். அப்போது அசிமிடம் பேசும் விக்ரமனின் தந்தை, "அசிம் எப்படி இருக்கீங்க?" என கேட்கிறார். தொடர்ந்து பேசும் அசிம், "நல்லா இருக்கேன் பா. டிவில பாக்குறது எல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க. அது எல்லாம் விவாதம் தான்" என கூறுகிறார். இதற்கு பதில் சொல்லும் விக்ரமனின் தந்தை, "அய்யய்யோ அதுல மனசுல வெச்சுக்க என்ன இருக்கு" என தெரிவிக்கிறார்.

இதே போல மற்றொரு இடத்தில், சில வார்த்தைகளை பேசியதாகவும் அவை கோபத்தால் உருவானதாகவும் விக்ரமனின் பெற்றோர்களிடம் அசிம் கூறுகிறார். இதற்கு பதில் சொல்லும் விக்ரமனின் தாயார், "எல்லாரும் எங்க புள்ளைங்க தான், அது எல்லாம் நாங்க கோவப்பட மாட்டோம்" என சிரித்த முகத்துடன் பதில் சொல்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் மற்றும் அசிம் ஆகியோரிடையே நிறைய முறை வாக்குவாதங்கள் அரங்கேறி உள்ளது.

அப்படி ஒரு சூழலில், விக்ரமனின் பெற்றோர்களிடம் அசிம் தெரிவித்த விஷயமும், அதற்கு அவர்கள் சொன்ன பதிலும் பெரிய அளவில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

Also Read | பாத்ரூமில் வழுக்கிய அசிம்?.. சத்தம் கேட்டு பதறியடிச்சு ஓடிய கதிரவன்.. என்னங்க நடந்துச்சு?

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman father to azeem about his angry speech bigg boss

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Vikraman will find this news story useful.