அமுதுவின் புதிய ஹேர் ஸ்டைல்.. விக்ரமனால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | மணிகண்டாவின் சர்ப்ரைஸை முன்கூட்டியே கண்டுபிடிச்ச ADK.. இன்றைய பிக்பாசில்..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

இதனிடையே, Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசீமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இந்நிலையில், அமுதவாணனுக்கு ஹேர் ஸ்டைலை மாற்றும்படி சொல்லியிருக்கிறார் பிக்பாஸ்.

அதன்படி, அமுதவாணன் தனது முடிக்கு வண்ணம் பூசியிருக்கிறார். அதன் பிறகு குளித்துவிட்டு வரும் அமுதவாணனை பார்த்து அங்கு அமர்ந்திருந்த விக்ரமன் சிரிக்கிறார். அப்போது விக்ரமன்," என்ன அமுது இது. வறுத்த சேமியா மாதிரி இருக்கு. இப்படித்தான் இருக்குமா?" என சிரித்தபடியே கேட்கிறார். அருகில் நின்றிருந்த ராபர்ட்,"இன்னும் நெறய வரும். போட விட்டா தானே" என்கிறார்.

தொடர்ந்து அமுதுவின் முடியை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும் விக்ரமன்,"இது அப்படி இல்ல, பாயாசத்துல சேமியாவை பாதி வறுத்துட்டு போடுவோம்ல அப்படி இருக்கு" என சொல்கிறார். இதை கேட்டு சிரிக்கும் ராபர்ட்,"இதுவே பெரிய sacrifice தான். பிக்பாஸ் இதுக்கு மேல பையன போட சொல்லிடாதீங்க. பாவம் பையன்" என்கிறார்.

Also Read | அசீமை வச்சு Roast பண்ணிய தனா.. உடனே பிக்பாஸ் சொன்ன கமெண்ட் தான்.. மொத்த பேரும் சிரிச்சிட்டாங்க😂..!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman Comment on Amudhavanan New Hair style for Task

People looking for online information on Amudhavanan, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.