ஒரே ஒரு வார்த்தையால் உருவான சர்ச்சை?.. முறையிட்டு மாற்றிய விக்ரமன்?. APPLAUSE அள்ளிய சம்பவம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலாக சென்று கொண்டிருப்பதற்கு காரணம், ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் புது புது டாஸ்க்குகள் தான்.

Advertising
>
Advertising

Also Read | அருள்நிதி நடிப்பில் டிமான்ட்டி காலனி - 2.. அஜய் ஞானமுத்து வெளியிட்ட டைட்டில் லுக் போஸ்டர்!

இதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியும் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் அதிக ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

அதே வேளையில், டாஸ்க்கின் பெயரில் ஒவ்வொரு நாளும் எக்கச்சக்க சண்டைகள் மற்றும் சச்சரவுகளும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது.

பொம்மை டாஸ்க் தொடங்கி கடந்த வாரம் நடந்து முடிந்த நீதிமன்ற டாஸ்க் வரை போட்டியாளர்கள் மாறி மாறி சண்டை போட்ட நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். மற்ற நேரங்களில் ஒற்றுமையாக இருந்தால் கூட, டாஸ்க் என வந்து விட்டால் பிக்பாஸ் வீட்டிற்குள் நிச்சயம் பஞ்சாயத்து தான். கடந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் முடிவடைந்திருந்த சூழ்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க்காக பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க் தரப்பட்டுள்ளது. இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா இருக்கின்றனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் உள்ளனர்.

இரு அணிகளாக பிரிக்கப்பட்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் டாஸ்க் நடைபெற்று வருவதால் அடுத்தடுத்து விறுவிறுப்பு நிறைந்த வகையிலும் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில், ஒவ்வொரு அணிகளும் வெற்றி பெறவும் சில போட்டிகளை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார்.

அப்படி ஒரு சூழலில், இந்த டாஸ்க்கிற்கு மத்தியில் நடந்த சம்பவமும், அதனை தவறு என சுட்டிக் காட்டி விக்ரமன் கொடுத்த விளக்கமும் பெரிய அளவில் பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த டாஸ்க்கில் ஒரு தரப்பினரை அடிமை என பிக்பாஸ் அணியினர் குறிப்பிடுவதாக தெரிகிறது. இதனை முற்றிலும் மறுத்த விக்ரமன், அதனை தவறு எனக்கூறி, பிக்பாஸ் அணியினரிடம் வலியுறுத்தவும் செய்கிறார்.

அதன் பின்னர் தான், சேவகன் என அந்த வார்த்தை மாற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. டாஸ்க்கில் கூட வார்த்தையில் பிழை இருப்பதை அறிந்து, அதனை மாற்ற சொல்லி வலியுறுத்திய விக்ரமனின் செயல், தற்போது பார்வையாளர்கள் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

Also Read | Pushpa : ரஷ்ய மொழியில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா பாகம் -1’.. வெளியான டிரெய்லர்..

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman clarified bigg boss mistakes in new task

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.