ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா, நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.
இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.
இந்நிலையில், வீட்டுக்குள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் வீட்டுக்குள் புதிய சிக்கல் ஒன்று வந்திருக்கிறது. விக்ரமன் தான் மணிகண்டாவிடம் முட்டை கேட்டதாகவும் அவர் இல்லை என்று சொல்லிவிட்டதாகவும் கூறுகிறார். அப்போது, "நான் இல்லைன்னு சொன்னேனா?" என கேட்கும் மணி, விக்ரமன் அருகே அமர்ந்திருந்த மகேஷ்வரியிடம்," நீங்க ஏன் தலையை ஆட்டுறீங்க. எனக்கு கோபம் வந்துடும். விக்ரமன் கிட்ட பேசும்போது நீங்க ஏன் குறுக்க வரீங்க" என்றார்.
இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது, மகேஷ்வரியின் எலிமினேஷன் பற்றி மணி பேசியிருக்கிறார். இதனிடையே மெண்டல் மாதிரி பேசாதீங்க என மகேஷ்வரி சொல்ல, "அதை வாபஸ் வாங்குங்க" என்கிறார் விக்ரமன். இந்த சூழ்நிலையில் அங்கிருந்த அசீம் மகேஷ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது அவரை சமாதானப்படுத்த விக்ரமன் முயற்சிக்க அசீம் - விக்ரமன் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையில் விக்ரமன் மற்றும் மகேஷ்வரி இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது விக்ரமன்,"என்ன காரணத்துக்காகவோ அவர் இன்னும் போட்டியில நீடிக்கிறார். 15 வாரம் அவர் உள்ள இருக்காரு. தெரியாம அவர் செஞ்சாருன்னா நாம சொல்லலாம். 15 முறை கூட சொல்லலாம். அவர் தெரியாம ஒன்னும் பேசல. இதை கோபம்னு சொல்றதை நான் ஏத்துக்க முடியாது. அவர் இதை வச்சு விளையாடுறாரு" என்கிறார்.
அப்போது பேசும் மகேஷ்வரி,"அசீம் அப்படித்தான். அவரை விடுங்க. அதுனால தான் இத பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு தகுதியே இல்ல பாஸ்-னு சொன்னேன். அவரு விளையாடுறதுக்கு, பாப்புலர் ஆகுறதுக்கு, ஹீரோவா காட்டிக்கிறதுக்கு நாங்க அசிங்கப்படணுமா?" என கூற,"அப்படி இருக்க தேவை இல்ல" என்கிறார் விக்ரமன்.
தொடர்ந்து பேசும் மகேஷ்வரி,"இதையெல்லாம் எப்படி நிறுத்துறது? அவர் வேற யார்கிட்டயாவது இப்படி பண்ணா, நாம ஏதும் பண்ண முடியாது. ஆனா, நம்ம கிட்ட அவர் இப்படி பேசும்போது நாம ஏதாவது செஞ்சுதானே ஆகணும்" எனக் கேட்கிறார். அவருக்கு பதில் அளிக்கும் விக்ரமன்,"அவரை கரெக்ட் பண்றது நம்ம வேலை இல்ல. ஆனா திரும்பி அப்படியே பண்ணும்போது நாம ஒரு முடிவு எடுக்கணும்" என்கிறார்.
Also Read | "கிளம்பு காத்து வரட்டும்".. ஆக்ரோஷமான அசீம்.. "நாகரீகமா பேசுங்க".. விக்ரமன் பதிலடி.. திரும்பவுமா??