"விக்ரமன் கூட கருத்து வேறுபாடு".. மனம் திறந்து பேசிய ஜிபி முத்து.. மனச TOUCH பண்ணிட்டாங்கப்பா"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் Finale நடைபெறும் என தெரிவதால் யார் வெற்றி பெறுவார் என்ற கணிப்பையும் பலர் முன் வைத்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

பல விறுவிறுப்பான கட்டத்திற்கு மத்தியில், தற்போது 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளனர். முன்னதாக கதிரவனும் Finale வுக்கு முன்னேறி இருந்த நிலையில், 3 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு கதிரவன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார்.

தொடர்ந்து ஐந்து போட்டியாளர்கள் இருக்கும் சூழலில், மீண்டும் பணப் பெட்டி ஒன்றும் வந்துள்ளது. இதனை யாராவது எடுத்து விட்டு வெளியேறுவார்களா என்ற விறுவிறுப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனிடையே, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் ஒரு போட்டியாளருடன் நட்பை வளர்க்காமல் விட்டு விட்டோம் என நினைத்தால் அவர் கையில் Friendship Band கட்டிவிட்டு நட்பை தொடங்கும்படியும் பிக் பாஸ் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

அப்படி இருக்கையில், ஒவ்வொரு போட்டியாளர்களும் சக ஹவுஸ்மேட்ஸ் ஒருவருக்கு Friendship Band-ஐ கட்டி அதற்கான காரணத்தையும் தெரிவிக்கின்றனர். இதில், விக்ரமன் கையில் Band கட்டி பேசி இருந்தார் ஷெரினா. அப்போது பேசிய அவர், "ஃபர்ஸ்ட் எல்லாம் விக்ரமன எனக்கு சுத்தமா பிடிக்காது. அப்புறம் ஒரு 3 ஆவது வாரத்துல விக்ரமன் இப்படி தான்னு புரிஞ்சுது. அப்புறம் விக்ரமன் கேரக்டர் புடிச்சுது. 4 ஆவது வாரம் நான் வெளிய போய்ட்டேன். எனக்கு உங்க கூட கனெக்ட் பண்ணிக்க வாய்ப்பே கிடைக்கல. அதுனால வெளிய போயிட்டு தொடரணும்ன்னு நினைக்குறேன்" என தெரிவித்தார்.

அதே போல, விக்ரமன் குறித்து பேசிய ஜிபி முத்து, "எனக்கும் விக்ரமனுக்கும் ஆரம்பத்துல இருந்தே கருத்து வேறுபாடு இருக்கு. அது வந்து சண்டை ஆகிட்டே இருக்கு. வெளிய போய் கருத்து வேறுபாடு இல்லாம நான் என்னைக்கும் நட்போட இருக்கணும் அவரோட ஸ்டைல் அவருகிட்ட இருக்கட்டும். என்னோட ஸ்டைல் என்னோட இருக்கட்டும். நாங்க நட்பாவே பழகுறோம்" என கூறியபடி Friendship band-ஐ விக்ரமன் கையில் ஜிபி முத்து கட்டி இருந்தார்.

அப்போது பேசிய விக்ரமன், ஜிபி முத்து தனக்கு வீட்டில் இருக்கும் பெரியப்பா, சித்தப்பா போன்ற ஒரு நபர் என்றும் அப்படி ஒரு பிணைப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பேசிய ஜிபி முத்து, குடும்பத்தில் அப்பா, பையனுக்கு இருக்கும் கருத்து வேறுபாடு போல தங்களுக்குள் இருப்பதாகவும் ஆனால் மனதிற்குள் மாறி மாறி பாசம் இருப்பதாகவும் உருக்கத்துடன் கூறி இருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman and GP Muthu emotional moments in bigg boss

People looking for online information on Bigg Boss Tamil, GP MUTHU, Vikraman will find this news story useful.