"விக்ரமன நாமினேட் பண்ணல, ஏன்னா".. பிக் பாஸ் சீசனின் கடைசி நாமினேஷன்.. பரபர சம்பவம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | "வாரிசு படத்தின் ரன்னிங் டைம் இது தானா?".. வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.

இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். அவர் வெளியேறியதும் பிக் பாஸ் வீட்டில் அவருக்கு மிகவும் நெருங்கிய போட்டியாளரான ஷிவின் கட்டியணைத்து கண்ணீர் விட்டிருந்த விஷயம், பலரையும் மனம் உருக வைத்திருந்தது.

இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக பிக் பாஸ் அறிவித்துள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது.

இதில் "Nominated" என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒன்று இருக்க, அதனை தாங்கள் நாமினேட் செய்யும் போட்டியாளர் முகத்தில் நாமினேட் செய்து ஒட்டி அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என தெரிகிறது. இதில், ஷிவின், மைனா நந்தினி, விக்ரமன் உள்ளிட்டோர் அசிமை நாமினேட் செய்து அவர் முகத்தில் நாமினேட்டட் என்ற ஸ்டிக்கரை ஒட்டுகின்றனர்.

அதே போல, கடைசியில் பேசும் அசிம், விக்ரமனை நாமினேட் செய்ய போவதில்லை என்றும் குறிப்பிட்டு அதற்கான சில காரணங்களையும் முன் வைக்கிறார். கடந்த வார இறுதியில் கமல்ஹாசன் வந்த போது நடந்த டாஸ்க் ஒன்றில், பலரும் அசிமின் கோபம் மற்றும் அவர் உடனடியாக மாறுவதை சக போட்டியாளர்கள் விமர்சனமாக முன் வைத்திருந்தனர். அப்படி ஒரு சூழலில் சில போட்டியாளர்கள் அசிமை அதிகம் நாமினேட் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | கண்ணீருடன் வெளியேறிய ரச்சிதா.. கிளம்பும் நேரத்தில் விக்ரமன் சொன்ன வார்த்தை!!.. Emotional!!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman and Azeem in last nomination bigg boss house

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.