இப்ப தானே ஆறுதல் சொல்லிக்கிட்டாங்க.. திரும்பவும் முட்டிகிச்சா? விக்ரமன் VS அசிம்.. BIGG BOSS 6 TAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 70 நாட்களை கடந்த நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | நடிகர் RK சுரேஷ் மனைவியின் வளைகாப்பு.. நேரில் வாழ்த்திய சினிமா & அரசியல் பிரபலங்கள்!

மேலும் இந்த வாரம் நடைபெறும் டாஸ்க், மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. இதற்கு காரணம், பள்ளி மற்றும் கல்லூரியாக பிக்பாஸ் வீடு மாறி வருவது தான். இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஆரம்ப பள்ளியாக மாறி இருந்த பிக்பாஸ் வீடு, அதன் பின்னர் மேல்நிலைப் பள்ளியாக மாறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, 1980-ஸில் இருக்கும் கல்லூரியாகவும் பிக் பாஸ் வீடு செட் செய்யப்பட்டது. "இந்திரன் சந்திரன் கலைக் கல்லூரி" என்ற பெயரில், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் Vintage உடைகளை அணிந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக வலம் வருகின்றனர். ஒன் சைடு லவ் செய்யும் சைக்காலஜி ஆசிரியராக விக்ரமனும், நடன ஆசிரியர்களாக இரண்டு போட்டியாளர்களும் இருந்தனர். மற்ற 7 பேரும் மாணவர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் வலம் வந்திருந்தனர்.

முந்தைய டாஸ்க்குகள் நடைபெறும் சமயத்தில் நிறைய சண்டைகள் தான் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி கொண்டே இருக்கும். இதனால், எப்போதும் ரணகளமாக தான் போட்டியாளர்கள் இயங்கி கொண்டே வந்தனர். ஆனால், பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி டாஸ்க், அதிகம் எமோஷனல் ஆகவும், ஜாலியாகவும் தான் இந்த வாரம் சென்று கொண்டிருந்தது.

அப்படி ஒரு சூழலில் தற்போது டாஸ்க் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ள நிலையில், விக்ரமன் மற்றும் அசிம் ஆகியோர் பேசிக் கொண்ட விஷயம், பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாஸ்க் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ராங்க் அடிப்படையில் போட்டியாளர்களை நிற்க பிக்பாஸ் வலியுறுத்துகிறார். அப்போது, முதல் ராங்க்கில் அசிம் நிற்க, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே அமுதவாணன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் நிற்கின்றனர்.

அப்போது அமுதாவணனிடம் அசிம் சண்டை போட்டது பற்றி விக்ரமன் பேச முயல, "உங்களுக்கு கட்ட பஞ்சாயத்து பழக்கம் ஆயிடுச்சா?. அமுதவாணன பேசுறது என் விருப்பம்" என அசிம் முறையிடுகிறார்.

தொடர்ந்து பேசும் விக்ரமன், "விளையாட்டுங்குறது விளையாட்டு தான். ஆனா அந்த விளையாட்டுக்காக தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப்படுத்துறததோ, அவமானப்படுத்துறது" என விக்ரமன் பேசி கொண்டிருக்க, பஞ்சாயத்து செய்வதாக அசிம் கூறுகிறார்.

இதன் பின்னர் பேசும் விக்ரமன், "உங்களுக்கு சொல்லக் கூடிய இறுதி எச்சரிக்கை. ஏன்னா மக்கள் பாத்துட்டு இருக்காங்க." என கூறுகிறார். அப்போது பேசும் அசிம், "பிக்பாஸ் வீட்டுல கட்ட பஞ்சாயத்து பண்ணாதீங்க சரியா?" என கேட்க விக்ரமன் மற்றும் அசிம் இடையே வாக்குவாதம் உருவாகியது. "மன்னாதி மன்னர்கள் எல்லாம் மண்ணை கவ்விய வரலாறு உண்டு" என விக்ரமன் ஆவேசத்துடன் பேசியதும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அமுதவாணன் மற்றும் அசிம் இடையே நடந்த சண்டை பற்றி பேச போன சமயத்தில், விக்ரமன் மற்றும் அசிம் ஆகியோர் மாறி மாறி கருத்துக்களை பேசிக் கொண்ட விஷயம் அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி உள்ளது.

Also Read | துணிவு படத்தில் G.P. முத்து.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! செம சர்ப்ரைஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman and azeem clash in ranking task bigg boss

People looking for online information on A, Amudhavanan, Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.