BIGG BOSS 6 TAMIL : "பொண்ணு பின்னாடி போறனா..?".. தனலட்சுமி விஷயத்தில் விக்ரமன் VS ADK அனல் பறந்த வாக்குவாதம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் தனலட்சுமி - அசல் கோலார் இடையே எதார்த்தமாக தொடங்கிய பேச்சு, வாக்குவாதமானது. அதில் தன்னை பாடி ஷேமிங் செய்வதாக அசல் கோலாரின் மீது குற்றம்சாட்டினார் தனலட்சுமி. பின்னர் அசீம், ஜனனி ஆகியோர் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். இவர்களுள் அசீம், தனலட்சுமியை பேசி சமாதனப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். இதனிடையே அங்கு வரும் விக்ரமன், என்ன நடந்தது என தனலட்சுமியிடன் கேட்கிறார்.

அவர்,"அண்ணா-னு தான் நான் கூப்பிட்டேன். அதுக்கு பெரியம்மா மாதிரி இருக்க, ஆன்டி மாதிரி இருக்கன்னு சொல்றான்" என கூறுகிறார். இதனையடுத்து விக்ரமன் தனலட்சுமியிடம் பேசப் போக, அசீம் அவரை விடச்சொல்லி பேசுகிறார்.  அதற்கு விக்ரமனோ, “இருங்க.. நான் விசாரிக்கிறேன்.. அவங்க கிட்டதானே பேசினேன்” என சொல்ல, அதற்கு அசீம், "நான் உன்கிட்ட பேசுனேனா? உனக்கென்ன பிரச்சனை?" எனக் கேட்கிறார். அப்போது அங்குவரும் GP முத்து மற்றும் ADK ஆகியோர் விக்ரமனை சமாதானப்படுத்த தனியாக அழைத்துச் செல்கின்றனர்.

அப்போது, "நான் கேக்க கூடாதுனு சொல்றதுக்கு நீங்க யாரு?" என விக்ரமன் கோபமாக கேட்கிறார். மேலும் விஷயத்துக்குள் வந்த ஜிபி முத்து, விக்ரமனை அப்புறப்படுத்த, அவரிடம் விக்ரமன், “நீங்க ஏங்க என்ன மட்டும் எதுவும் கேக்க கூடாதுனு சொல்றீங்க.. என்னை மட்டும் நோஸ் கட் பண்றீங்க?” என பேசினார். இதனிடையே அங்கு வந்த ADK, “ஏன் பொண்ணு கிட்ட மட்டும் போய் கேக்குறீங்க.. அசலிடமும் கேளுங்க.?” என ADK கேட்க, "நீங்க திரும்ப தப்பான வார்த்தையை பயன்படுத்துறீங்க.. என்ன பொண்ணு பின்னாடி மட்டும் நான் போய் கேக்குறேன்னு சொல்றீங்க.. என்ன பேசிட்டு இருக்கீங்க?" என விக்ரமன் கொந்தளித்தார்.

அப்போது "யாரு சொன்னாலும் தப்பா?" எனக் கேட்கிறார் ADK. பின்னர், "இந்த விஷயத்துல நீங்க ஏன் வந்தீங்க?" என முத்துவிடம் விக்ரமன் கேட்க "வரத்தான் செய்வேன்" என என்கிறார் முத்து. ஏற்கனவே தனலட்சுமி - அசல் கோலார் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து விக்ரமனும் சக போட்டியாளர்களும் விவாதத்தில் ஈடுபட்டிருப்பது பிக்பாஸ் வீட்டுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman and ADK heated argument in Dhanalakshmi issue

People looking for online information on Bigg boss 6 tamil promobigg boss 6 tamil contestants listbigg boss tamil, Bigg boss tamil 6bigg boss season 6vijay tvbigg boss tamil promo, Bigg boss tamil 6bigg boss tamil season 6bigg boss tamil 6 contestantsrachitha mahalakshmi, Dhanalakshmi, GP MUTHU will find this news story useful.